மதம்

பந்தள மன்னர் குடும்பம் மீதும் தந்திரிகள் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வருமா?

Share

இன்று தெலுங்கானாவை சேர்ந்த பெண் பத்திரிகையாளர் பக்தர் கவிதாவும் கொச்சியை சேர்ந்த ரஹானா பாத்திமா என்ற இந்து மதத்திற்கு மாறிய பெண் பக்தரும் சபரிமலைக்கு இருமுடி கட்டி சுவாமி தரிசனம் செய்ய காவல் துறை பாதுகாப்பை கேட்டிருக்கின்றனர்.

காவல் துறையும் ஐ ஜி ஒருவரின் தலைமையில் பாதுகாப்பு கொடுத்து ஐயப்பன் கோவில் சந்நிதானம் அருகே வரை கொண்டு சென்று விட்டனர்.

ஆனால் அங்கே வந்த பாஜக வினரும் சங்க பரிவார தொண்டர்களும் அவர்களை மறித்து கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பக்தர்கள் என்றால் தரிசனம் செய்ய செல்ல வேண்டும். அவர்களை எப்படி காவல்துறை போராட்டம் செய்ய அனுமதித்தது?

இடது சாரி அரசு உறுதியான நிலைப்பாட்டை எடுக்கத் தவறியதால் பாஜக துணிவு வந்து அதிரடியான முடிவுகளை அறிவிக்க முனைந்தது .

நடை ஏறிவிடுவார்கள் பெண்கள் என்ற நிலை வந்தபோது பந்தள அரச குடும்பம் பெண்கள் வந்தால் கோவிலை இழுத்து மூட தந்திரிகளுக்கு உத்தரவிட்டதாக செய்திகள் வந்தன. அவர்களுக்கு அந்த அதிகாரம் உண்டா?

தந்திரிகள் பதினெட்டாம் படி முன் அமர்ந்து தர்ணா செய்தார்கள். அவர்களுக்கு அந்த அதிகாரம் உண்டா?

என்ன நடக்கிறது சபரிமலையில்?

அமைச்சர் சபரிமலை கோவிலை கலவர பூமியாக மாற்ற விருப்பமில்லை என்கிறார்.

இறுதியில் பெண்கள் இருவரையும் திருப்பி அனுப்பமுடிவு செய்கிறார்கள்.

ஆட்சியில் இருப்பது சட்டமா? பார்ப்பநீயமா?

பிற்பட்டோர் ஆதிக்கத்தை ஒழித்துக் கட்ட சங்க பரிவாரம் செய்யும் சூழ்ச்சிதான் சபரிமலை போராட்டம் என்று முதல்வர் பினராயி விஜயன் கூறுகிறார்.  ஆனால் நடவடிக்கை எடுக்க  மறுக்கிறார்.

அவசரமாக ஆளுநர் சதாசிவம் டிஜிபி ஐ கூப்பிட்டு பேசுகிறார். மத்திய அரசிடமிருந்து என்ன உத்தரவு வந்தது  என்பதை யாரும் சொல்லவில்லை .

ஆனால் கொச்சியில் கோவிலுக்கு செல்ல முனைந்த ரஹானா பாத்திமா வின் வீடு சூறையாடப் படுகின்றது.   அதை தடுக்க வேண்டிய கடமையில் காவல் துறை ஏன் தவறியது? அவருக்கு இழப்பீடு தந்து தன்னை நியாயத்தின் பக்கம் நிற்பவர்கள் என்று பினராயி விஜயன் அரசு நிரூபிக்கட்டும்.

என்ன செய்ய போகிறது உச்சநீதிமன்றம்?

வெல்லப்போவது சட்டமா அல்லது அரசியல் ஆதாயம் தேடும் மதவெறியா என்பதை  பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

This website uses cookies.