பார்ப்பனர்கள் தங்களுக்குள் மோதிக்கொள்கிற போலி சண்டை எதற்காக நடக்கிறது என்பது புரியாத புதிர்.
சும்மா மக்களை குழப்பி பிரச்னை இல்லாத ஒன்றை பிரச்னை ஆக்கி அதை எல்லாரும் பேசும்படி செய்வது மூலமாக அவர்கள் எதை சாதிக்க நினைக்கிறார்கள்.?
கோவில் சம்பந்தமாக நடக்கும் விழாக்கள் பலவற்றில் சுவாமி சம்பத்தப்பட்ட எதிலும் பார்ப்பனர்கள் அல்லாதோருக்கு எந்தவொரு பங்கும் இல்லை. அதிகபட்சம் பல்லக்கு தூக்குவது பூக்கட்டி கொடுப்பது என்று தொண்டு காரியங்கள் தொடர்பாகத்தான் பார்ப்பனரல்லாதரர் பங்கு இருக்கும். எட்ட நின்று சுவாமி கும்பிடுவது மட்டுமே அவர்களுக்கு அதிகப்படியான உரிமை.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வீதியுலாவில் திருக்கச்சி நம்பித்தெருவில் வேடுபறி என்ற நிகழ்வில் சுவாமி எழுந்தருளியபோது அங்கே தென்கலை மரபினர் திருமங்கை ஆழ்வார் பாசுரம் பாட முயன்றபோது அதை வடகலை பார்ப்பனர்கள் தடுக்க முயன்று அங்கே தகராறு ஏற்பட்டிருக்கிறது.
வேடிக்கை என்னவென்றால் பாடுவதும் பார்ப்பனர்கள். அதை தடுப்பதும் பார்ப்பனர்கள். ஏன் இந்த போலி சண்டை??!!
வடகலை மரபினர்களுக்கு ஆதரவாக ‘சோடா பாட்டில்’ புகழ் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு கொடுத்தாராம்.
எதற்காக பாசுரம் பாடுவதை தடுக்கிறார்கள் என்பது தெரியவில்லை. இதுமாதிரி யான கோணங்கித் தனங்களை நடத்தி மற்றவர்கள் வேடிக்கை பார்க்க வைப்பதன் மூலம் எல்லாரையும் முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார்கள் பார்ப்பனர்கள்.
மரபு என்று எதையாவது சொல்லி பொருளற்ற காரியங்களை நிகழ்த்திக் கொண்டிருப்பது சம்பிரதாய உரிமையாகாது.
வைணவம் எதை போதிக்கிறதோ அதை பார்ப்பனர்கள் கடைப்பிடிப்பதே இல்லை.
அது சாஸ்திரம் இது லௌகீகம் என்று ஏற்றுக் கொள்ளவே முடியாத நொண்டி சாக்கு எதையாவது சொல்வார்கள்.
பக்தர்கள் என்போர் சிந்திப்பார்களாக??!!
This website uses cookies.