உலகலாவிய அளவில் இன்று நிலவும் அனைத்து பிரச்னைகளுக்கும் அடிப்படையாக மதமே இருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
பின் ஏன் மதத்தை கட்டி அழுகிறார்கள் மனிதர்கள்?
கடவுளை நம்பி வழிபடுவதில் எந்த மனிதர்களுக்கும் இடையே எந்த கருத்து வேறுபாடும் பிரச்னையும் இல்லை. கடவுளை நம்பாதவர்கள் நம்பாமல் செயல்படுவதில் நம்பிக்கையாளர்களுக்கும் எந்த பிரச்னையும் இல்லை.
என் மதத்தை நீ நம்பு உன் மதம் உண்மையில்லை என்பதில்தான் பிரச்னை.
எந்த மதத்தையும் அதுவே சரி என்று நிரூப்பிப்பதில்தான் பிரச்னை.
யாரும் யாரையும் திருப்திப் படுத்த முடியாது. யாரும் தங்கள் நம்பிக்கையே உண்மை என்று நிரூபிக்கவும் முடியாது. வேண்டுமானால் அது தங்கள் அனுபவம் என்று சொல்லிக் கொள்ளலாம். அதை மற்றவர் நம்ப வேண்டும் என்பது என்ன கட்டாயம்.?
ஆக நம்பிக்கை என்பது அவரவர் தனிப்பட்ட நம்பிக்கையைப் பொறுத்தது என்பது இறுதியானது.
இதில் ஏன் மற்றவனை ஒருவன் கட்டாயப்படுத்த வேண்டும்?
மதத்தை பரப்பும் உரிமையை கட்டுப்படுத்தினால் எல்லா பிரச்னை களுக்கும் ஒரு விடிவு ஏற்படும்.
அதற்குத் தேவை அரசியல் சட்டத்திருத்தம்.
நம் அரசியல் சட்டம் மதத்தை பரப்பும் உரிமையை வழங்கி இருக்கிறது. அதற்கு எந்த கட்டுப் பாடும் இல்லை. அதனால் எவர் வேண்டுமானாலும் தன் செல்வாக்கு அல்லது பண பலத்தை பயன்படுத்தி எவரை வேண்டுமானாலும் மதம் மாற்றலாம். ஆனால் அவர்கள் தங்கள் பலத்தை பயன்படுத்தி மற்றவரை தாங்களாகவே விரும்பி மதம் மாறுவதை போல் ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தலாம்.
இங்கேதான் பிரச்னை. மதம் மாறுவது விருப்பத்தின் பேராலா அல்லது புற காரணிகளின் அடிப்படையிலா என்பது விவாதத்துக்கு உரியதாகிறது.
ஒரு கிறிஸ்தவன் ஒருபோதும் முஸ்லிம் ஆக மாட்டான். ஒரு முஸ்லிம் ஒரு போதும் கிறிஸ்தவன் ஆக மாட்டான். ஒரு பௌத்தன் ஒரு போதும் முஸ்லிம் ஆக மாட்டான். ஒரு ஜைனன் ஒரு போதும் முஸ்லிம் ஆக மாட்டான். ஒரு சீக்கியன் ஒரு போதும் கிறிஸ்தவன் ஆக மாட்டான். ஒரு இந்து வேறு மதத்துக்கு மாற மாறமாட்டான்.
மதங்கள் எல்லாமே கடவுளை அடிப்படையாக் கொண்டிருந்தாலும் யார் அந்த கடவுள் என்பதில் தான் பிரச்னை.
நாம் கேட்கும் கேள்வி. கடவுள் நம்பிக்கைக்கு மதம் தேவையா ?
மத அடையாளம் இல்லாமலேயே ஒருவன் கடவுள் நம்பிக்கையாளன் ஆக வாழ முடியாதா?
எல்லாக் கடவுளர்களையும் ஒரே சக்திதான் என்று நம்புபவன் ஏன் தன்னை நம்பிக்கையாளன் மதமற்றவன் என்று சொல்லிக் கொள்ள முடியாது என்பதுதான் பொது மேடை இன்று வைக்கும் கேள்வி?
விடை தேடுவோம் !!!