தமிழ் நாட்டுக்கு தலை குனிவை ஏற்படுத்திய கொடூர சம்பவம் அது.
11 வயதேயான பேச, கேட்க இயலாத மாற்றுதிறநாளி சிறுமியை அடுக்கு மாடி குடியிருப்பில் வைத்து அங்கே வேலை செய்த காவலாளிகள் முதலான 17 மனித உருவில் உலவிய மிருகங்கள் ஆறு மாதங்களுக்கு மேலாக சீரழித்து வந்திருக்கிறார்கள்.
பெற்றோர் கவனமின்மை காரணமா , அக்கம் பக்கத்தில் உள்ளோர் யாருமே கவனிக்க வில்லையா என்ற பல கேள்விகள் அணிவகுத்து நின்றாலும் இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்ற உண்மை அச்சத்தை உண்டு பண்ணுகிறது.
குற்றங்கள் வித விதமாக நாளும் நடக்கின்றன. அதிலே இதுவும் ஒன்று என கடந்து போக இயலா அளவு குற்றத்தின் கொடூரம் எல்லாரையும் பாதித் திருக்கிறது.
போஸ்கோ சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க இருக்கிறார்கள்.
விரைவில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப் பட்டு விசாரணை நடந்து குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப் படுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
தாமதமாக விழித்துக் கொண்டாலும் சட்டம் தன் கடமையை நிச்சயம் செய்யும்.
வழக்கறிஞர்கள் யாரும் குற்றவாளிகளுக்கு ஆஜராக தயாராக இல்லை என்றாலும் சட்டப்படி நீதிமன்றம் அவர்களுக்கு ஒரு வழக்கறிஞரை நியமிக்கும். ஆனால் எவராலும் காப்பற்ற முடியாத குற்றத்தை செய்த அந்த கொடூரர்கள் கடுமையான தண்டனைக்கு ஆளாக்கப் படவேண்டும்.
இதற்கிடையே கஸ்தூரி என்ற பார்ப்பன நடிகை இந்த சம்பவத்தை கண்டிக்கும் சாக்கில் ‘ இது என்ன தமிழ் பண்பாடு ?” என்று கேள்வி எழுப்பி இருப்பது அவரது நரிக்குணத்தை காட்டுகிறது.
ஒரு பார்ப்பன அர்ச்சகர் , தேவநாதன் என்பவர், சாமி சந்நிதியிலேயே காம களியாட்டம் நடத்திய காட்சிகள் வலம் வந்தது. யாரும் பார்ப்பனர் அர்ச்சகர் எல்லாருமே காமுகர்கள் என்று சொல்லவில்லை. அவன் தீயவன். தண்டிக்கப் பட வேண்டிய குற்றவாளி . அவ்வளவுதான்.
எல்லா சமுதாயங்களிலும் குற்றவாளிகள் இருக்கிறார்கள். அவர்களை வைத்து அந்த சமுதாயத்தை இழிவாக சித்திரிக்க முயல கூடாது.
கொலைக்கு மரணம் தண்டனை என்றாலும் கொலைகள் குறைய வில்லையே?!
தண்டனை பற்றிய பயம் குற்றவாளிகளுக்கு இல்லை. எனவே குற்றம் குறைய,
தண்டனைச் சட்டம் இன்னும் கடுமை ஆக்கப் பட வேண்டும்.