உச்சநீதிமன்றத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த அவகாசம் கேட்டு மாநில தேர்தல் கமிஷன் கொடுத்த மனுவை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
அதாவது வரும் அக்டோபர் மாதம் கடைசிவாரத்தில் தேர்தல் எப்போது நடக்கும் என்ற அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடும்.
அப்படி அறிவிப்பை வெளியிடாவிட்டால் என்ன நடக்கும்.? நீதி மன்ற அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும். அவ்வளவுதானே? எதிர்கொண்டால் போயிற்று. இதுதான் அதிமுக அரசின் அணுகுமுறையாக இருக்கிறது.
சட்ட மன்ற தேர்தலுக்கு முன்னாள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி தனக்கு செல்வாக்கு இல்லை என்பதை வெளிக்காட்ட எந்த அரசுதான் விரும்பும்?
அதற்கு தமிழகம் கொடுக்கும் விலைதான் அதிகம்.
உள்ளாட்சி நிதி பங்காக தமிழகத்திற்கு வர வேண்டிய சுமார் நான்காயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு நிறுத்தி வைத்திருக்கிறது. பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர் உள்ளாட்சி தேர்தலை நடத்தாவிட்டால் நிதியை விடுவிக்க முடியாது என்றார்.
தேர்தலுக்கும் நிதிக்கும் தொடர்பில்லை. கொடுக்க வேண்டும் என்பது தமிழக அரசின் நிலை.
ஆனால் மத்திய அரசு தேர்தல் நடத்தாதயை சாக்காக வைத்து நிதியை நிறுத்தி வைக்கலாம்.
ஆக தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதம் காத்திருக்க வேண்டும். அதாவது அப்போதும் மாநில அரசு மனது வைத்தால்தான்.