அறிவு ஜீவியா பைத்தியக்காரனா? சுப்பிரமணியசாமியை எப்படி வர்ணிப்பது?
பறையர் என்று யாரையோ திட்டப்போக எதிர்ப்பு கிளம்பவும் அது ஆங்கில அகராதியில் இருக்கிறது என்று பதில் சொன்னார். எதிர்பவர்களை பொறுக்கிகள் என்று வர்ணிப்பது அவரது வாடிக்கை. சொல்பவர் அப்படித்தான் என்று யாரும் அதை பொருட் படுத்துவதில்லை.
ஆனால் அளவு மீறிக்கொண்டிற்குகிறார் சு. சாமி.
இந்த அத்துமீறல்களை ஏன் பொறுப்புள்ள ஊடகங்கள் கண்டிப்பதில்லை. அவர் பார்ப்பனர் என்பதாலா? ஊடகங்கள் பெரும்பாலும் அவர்கள் வசம்தானே!
ஆனால் அவர் பா ஜ க வின் அகில இந்திய தலைவர்களில் ஒருவர். அவர் சொல்வதற்கும் பா ஜ க வுக்கும் சம்பந்தம் ஏதுமில்லை என்று தமிழிசை சொல்கிறார். பின் ஏன் பா ஜ க வில் வைத்திருக்கிறீர்கள்?
சங்கராசாரியுடன் சமமாக நாற்காலி போட்டு உட்கார அவரால் முடிகிறது. பொன். ராதாகிருஷ்ணன் அமைச்சராக இருந்தாலும் கீழேதான் உட்கார வேண்டும். தன்மானம் இருந்தால் வெளியே வந்திருக்க வேண்டாமா?
பலகுரல் பா ஜ க தரப்பில் இருந்து கேட்கும். எது உண்மையான பா ஜ க வின் குரல் என்று வெகு சிலருக்குத்தான் தெரியும்.
பா ஜ க எம்பிக்கள் எத்தனை முறை தீவிர இந்துத்துவ கருத்துக்களை வெளியிட்டிருக் கிரார்கள். யார் மீதாவது நடவடிக்கை உண்டா? எனவே திட்டமுடன் தான் பேசுகிறார்கள்.
அப்படித்தான் சுப்பிரமணியசாமியும் பேசுகிறார்.
என்ன தைரியத்தில் அதிமுக எம்பிக்களை ஆடு மாடுகள் என்று விமர்சிக்கிறார். ஒபீஸ் சிடம் கேட்கிறார்கள் என்ன இப்படி சொல்கிறாரே என்று? அவருக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியுமா என்று பதில் சொல்கிறார். இவர்களுக்கெல்லாம் தன்மான உணர்வு என்று ஒன்று உண்டா இல்லையா?
அதைப்போல் காவிரித் தண்ணீர் தமிழ்நாட்டுக்கு கிடையாது என்று சொல்கிறார்.
பிறகு எதற்கு நடுவர் நீதிமன்றம்? இறுதி தீர்ப்பு எதற்கு? அரசிதழ் வெளியீடு எதற்கு? உச்சநீதி மன்றம் விரைவில் தீர்ப்பு வழங்க இருக்கிறதே அது எதற்கு? உலகில் அமுலில் இருக்கும் பன்னாட்டு நதிநீர் பங்கீட்டு உரிமை இரு மாநிலங்களுக்கு இடையே கிடையாதா? இதெல்லாம் தெரியாமல் சுப்பிரமணியசாமி பேசியிருப்பார் என்று சொல்ல முடியுமா?
தெரிந்தே தான் ஏதோ ஒரு செய்தியை சொல்ல வருகிறார். அது தமிழ்நாடு காவிரி நீரை கர்நாடகத்திடம் இருந்து எதிர்பார்க்க வேண்டாம். அதற்கு பா ஜ க துணை செய்யாது . வேறு வழிகளை பார்த்துக் கொள்ளுங்கள் . எங்களுக்கு கர்நாடகா ஆட்சிக்கு வர வேண்டும். தமிழ்நாட்டில் அதற்கு வாய்ப்பு இல்லை. எனவே பா ஜ க விடம் எதிர் பார்க்காதீர்கள். வெங்கையா நாயுடுவும் நிர்மலா சீதாராமனும் கூட இப்படித்தானே தமிழ் நாட்டு நலன்களுக்கு எதிராக பேசினார்கள்.
இஸ்ரேல் நாட்டிடம் இருந்து எந்திரம் கொண்டு வந்து தமிழ்நாட்டின் தண்ணீர் பிரச்னையை தீர்த்து விடுவாராம். அதுவும் நான்கு மாதத்துக்குள் இந்த திட்டத்தை முடிக்க முடியுமாம்? அது முடியும் என்றால் நாட்டில் மாநிலங்களுக்கு இடையே நதிநீர் பிரச்னை எதுவுமே இருக்காதே?
சென்னை மீஞ்சூரிலும் கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டம் நடைமுறைப் படுத்தப் பட்டு வருகிறது. ஆனால் அதற்கு ஆகும் செலவு? குடிநீருக்கே பஞ்சம் என்றால் சாகுபடிக்கு எப்படி போதும்?
அதிமுகவை இதைவிட யாரும் அவமானப் படுத்த முடியாது. ஆனால் எந்த அதிமுக தலைவரும் இதை ஒரு பொருட்டாக கூட எடுத்துக் கொள்ள தயாராக இல்லை. பயம். வருமான வரித்துறை மீதும் அமுலாக்கதுறை மீதும் சி பி ஐ மீதும் பயம். கொள்ளையடித்தவர்கள் பயந்துதான் ஆக வேண்டும்.
ஏதாவது பொறுப்புள்ள ஊடகம் இதைப்பற்றி எழுதி பிரச்னை எழுப்பி அதை மக்கள் போராட்டமாக மாற்றினால்தான் இது போன்று பொறுப்பில்லாமல் பேசி குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பவர்களின் முகமூடி கிழியும்.
This website uses cookies.