தமிழக அரசியல்

மீண்டும் ஓ பி எஸ் ! ஆளுநர் அறிக்கை தீர்வைத் தருமா?

Share

முதல்வர் ஜெயலலிதா இலாகா இல்லாத முதல்வராக நீடிப்பார்.

முதல்வரின் இலாகாக்கள் ஓ பன்னீர் செல்வத்துக்கு ஒதுக்கப்பட்டு அமைச்சரவைக் கூட்டங்களுக்கு அவரே தலைமை வகிப்பார் .    இந்த ஏற்பாடு ஜெயலலிதா மீண்டும் பொறுப்பேற்கும் வரை நீடிக்கும்.    இதுதான் ஆளுநர் இன்று வெளியிட்டிருக்கும் அறிவிப்பின் சாரம்.

முக்கியமாக இந்த அறிவிப்பை அவர் முதல்வர் ஜெயலலிதாவின் அறிவுறுத்தலின் பேரிலேயே வெளியிட்டிருக்கிறார்.

இதில் பல செய்திகள் உள்ளடங்கியிருக்கின்றன.

முதல்வர் ஜெயலலிதா அறிவுறுத்தும் நிலையில் இருக்கிறார்.    எந்த தேதியில் எந்த இடத்தில் எந்த நேரத்தில் ஆளுநர் இந்த அறிவுருத்தலைப் பெற்றார்  என்பதை ஆளுநர் அறிவிக்காவிட்டாலும்   அதைக் கேட்பது நாகரிகமில்லாத செயலாக பார்க்கப் படும்.

ஆட்சி நிர்வாகத்தை பொறுத்த வரையில் இனி யாரும் கேள்வி கேட்கப் போவதில்லை.

பொறுப்பில்  உள்ளவர்கள் சமாளிக்க வேண்டிய பிரச்னைகள் ஏராளம்.

ஆனாலும் முதல்வர் பற்றிய வதந்திகள் பரவுவதை இந்த அறிவிப்பு தடுத்து நிறுத்துமா?

அதையும் தடுக்கும் விதத்தில் இதைப்போல்  ஏதாவது செய்யுங்களேன்??!!

 

This website uses cookies.