கட்சி வேறுபாடு இன்றி அனைத்து தலைவர்களும் புகழாரம் சூட்டி சட்டமன்றத்தில் கலைஞருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதிலும் ஏதோ சம்பிரதாயத்துக்காக என்று இல்லாமல் உளபூர்வமாகவே முதல்வர் எடப்பாடி பழநிசாமியும் துணை முதல்வர் ஒ பன்னீர்செல்வமும் போட்டி போட்டுக்கொண்டு கலைஞரின் சிறப்பு இயல்புகளை பட்டியல் இட்டதை பார்த்தவர்கள் என்ன இருந்தாலும் இருவரும் திராவிட இயக்கத்துக்குச் சொந்தக்காரர்கள் என்பதை நிருபித்து விட்டார்களே என்ற உணர்வுதான் மிஞ்சியது.
ஒப்பாரும் மிக்காரும் இல்லாத கலைஞரின் சாதனைகளை முதலில் ஒ பி எஸ் அவை முன்னவர் என்ற முறையில் எடுத்து உரைத்தார்.
1957 முதல் தொடர்ந்து 13 முறை தோல்வியே காணாமல் சட்ட மன்ற உறுப்பினராக இருந்தது- ஒரு முறை சட்ட மன்ற மேலவை உறுப்பினர்- ஐந்து முறை தமிழக முதல் அமைச்சர் – 50 ஆண்டுகளாக திமுக தலைவர் – என்று கலைஞர் சாதனைகளை தொகுத்தார்.
அடுத்து முதல்வர் உரையில், கலைஞர் 14 வயதில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதில் இருந்து 17 வயதில் தமிழ்நாடு மாணவர் மன்றத்தின் தலைவர் அண்ணாவின் திராவிட நாடு பத்திரிகையில் படைப்பாளியாக இளமைப்பலி எழுதி அவரை கவர்ந்தது- நாடக ஆசிரியர் ஆகவும் நாவல் ஆசிரியர் ஆகவும் அவர் எழதிய படைப்புகள் – 75 திரைப்படங்களுக்கு கதைவசனம் எழுதிய பேராற்றல் என அனைத்தையும் நினைவு கூர்ந்து குறிப்பிட்டது உணர்வு பூர்வமாகவே இருந்தது.
அரசியல் செய்வோம். ஆனால் குடும்பத்தை மறக்க மாட்டோம் என்ற இந்த உரை எதிரிகளுக்கு ஒரு உண்மையை உணர்த்தி இருக்கும்.
இந்த மண் வள்ளலாராலும், வள்ளுவராலும், திருமூலராலும், பெரியாராலும் அண்ணாவாலும் பண் படுத்தப்பட்ட மண்.
இங்கே அன்னியர் வந்து புகல் என்பது நடவாது.
This website uses cookies.