தமிழக அரசியல்

அதிமுக செய்யும் அம்மா உணவக அரசியல்?

Share

கொரொனாவால்  பாதிக்கப் பட்ட மக்களுக்கு திமுக தனது மாவட்ட நிர்வாகிகள் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கி நல்ல பெயர் எடுப்பதை சகிக்காத அதிமுக அரசு அதற்கு தடை  போட முயற்சித்து உயர்நீதி  மன்ற தீர்ப்பால் இன்று அனுமதிக்க  வேண்டிய கட்டாயத்துக்கு  ஆளானது.

அப்படியும் பல முட்டுக் கட்டைகளை அதிகாரிகள் மூலம் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது அரசு.

அதே அதிமுக இன்று என்ன செய்கிறது. அந்தந்த மாவட்டங்களில் உள்ள அம்மா உணவகங்கள் மூலம் மக்களுக்கு இலவசமாக உணவு அளிக்க திட்டமிட்டு  அந்த செலவை மாவட்ட கழகங்கள்  ஏற்றுக் கொள்ள ஏற்பாடு செய்திருக்கிறது. இது மட்டும் அரசியல் இல்லையா?

வேண்டுமானால் திமுகவினரும் அம்மா உணவக செலவை ஏற்றுக் கொல்லட்டுமே என்றால் அது அதிமுக அரசு செய்வதாகத்தான் மக்கள் நினைப்பார்கள்.

ராயபுரத்தில் அமைச்சர்  ஜெயக்குமார் முதலில் அறிவிக்க பின்பு  முதல்வர் பழனிசாமி சேலத்தில் அறிவிக்க  மதுரையில்  செல்லூர்  ராஜு  என்று எல்லா மாவட்டங்களிலும்  அம்மா உணவகங்கள் அதிமுக நடத்தப் படுவதைப்போல் தோற்றம் உருவாகி விட்டது.

முகஸ்டாலின் இதை  ஆட்சேபித்து அறிக்கை வெளியிட்டதில் நியாயம் இருக்கிறது.

கொரொனாவில் அரசியல்  வேண்டாம் என்று  சொல்லிக் கொண்டே அரசியல் செய்து  கொண்டிருக்கிறது அதிமுக. 

சரி. வசூல் செய்ததில் ஒரு  பகுதியாவது   பொது மக்களின் உணவுக்கு  செய்கிறதே ?!

This website uses cookies.