மத உணர்ச்சியை தூண்டி தமிழர்கள் தங்களுக்குள் அடித்துக் கொண்டு சாக வேண்டும். அதில் பா ஜ க வை வளர்க்க வேண்டும். இதுதான் எச் ராஜாவின் சூழ்ச்சி. அது பலித்துக் கொண்டிருக்கிறது.
மருத்துவர் ராமதாஸ் வைரமுத்து பத்தாயிரம் முறை சிந்தித்து ஆண்டாளை பற்றி எழுதி இருக்க வேண்டும் என்கிறார். ஒரு வார்த்தையாவது வைரமுத்துவை தாசி மகன் என்றும் அவரது தலையை வெட்டுவோம் என்றும் பேசிய ராஜாவை கடுமையாக எச்சரிக்க வில்லை.
நயினார் நாகேந்திரன் வைரமுத்துவை கொல்ல வேண்டுமா வேண்டாமா என்று கேட்டு அவரது நாக்கை வெட்டி வருவோருக்கு பத்து கோடி அல்லது பத்து லட்சம் என்று விலை வைக்கிறார். அதிமுகவிலிருந்து பா ஜ க விருக்கு வந்து மாநில துணை தலைவர் பொறுப்பை வாங்கிக்கொண்டு மத்திய ஆளும் கட்சியின் செல்வாக்கை பயன் படுத்தும் திட்டத்தோடு இருக்கும் இவர் எப்போது இவர் இந்து தத்துவங்களை ஆராய்ந்திருக்கிறார். ?
தமிழ் எழுத்தாளார்கள் கூட்டமைப்பு வைரமுத்துவை மிரட்டுவதை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிக்கை.
எல்லா ஊடகங்களிலும் யார் மீது தவறு என்று விவாதங்கள்.
ஜீயர் ஒருவர் வைரமுத்து ஆண்டாள் சந்நிதிக்கு வந்து மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று உண்ணாவிரதம் இருக்கிறார். காவல் துறை தலையிட்டு ஒத்தி வைத்து விட்டு காலக்கெடு நிர்ணயித்து அதற்குள் வராவிட்டால் மீண்டும் உண்ணாவிரதம் என்று மிரட்டுகிறார்.
முடிந்த ஊர்களில் எல்லாம் பா ஜ க வி எச் பி , இந்து முன்னணி அமைப்புகள் தூண்டுதலில் ஆர்ப்பாட்டங்கள் என்று கலவரத்தை தூண்ட முயற்சி.
பாரதிராஜா எங்களை ஆயுதம் தூக்க தூண்டாதே என்று எச்சரிக்கிறார். குற்ற பரம்பரை என்று சாதி அடையாளத்தை ஏன் குறிப்பிட வேண்டும்.? இது சாதிப் பிரச்னையா/மதப் பிரச்னையா?
யாரும் பிரச்னையின் மூலம் என்ன என்பதை பற்றி விவாதிக்க மறுக்கிறார்கள்.
வைரமுத்துவின் கட்டுரை மூலமா? அதற்கு எச் ராஜா கொலை மிரட்டல் விடுத்தது மூலமா?
கட்டுரையையும் கொலைமிரட்டலையும் ஒன்றாக பார்க்கலாமா?
பெரியார் எழுதியது அத்தனையும் பார்ப்பனீயத்தை எதிர்த்துதான். இன்று குல்பர்கியை கொலை செய்தது போல் அன்று அவர்களால் அதை செய்ய முடியவில்லை. இன்றும் மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் அத்தனை புத்தகங்களையும் ஒழித்து விட முடியுமா உங்களால்?
வைரமுத்து கட்டுரையை வெளியிட்டது தினமணி நாளிதழ் . பார்ப்பன நிர்வாகம் தான் என்பதால் உடனே மன்னிப்பு கேட்டு கட்டுரையை தன் வெப் சைட்டில் இருந்து எடுத்து விட்டது.
அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இந்து மதம் என்ன கிள்ளுக்கீரையா என்று கேட்டு விட்டு வைரமுத்து வருத்தம் கேட்டு விட்டதால் அப்படியே விட்டு விட வேண்டியது தான் என்கிறார்.
தளபதி ஸ்டாலின் ராஜாவின் பேச்சை கண்டித்திருக்கிறார். கம்யுனிஸ்டுகள் கண்டிக்கிறார்கள். வைரமுத்து மீது வழக்குகள் , ராஜா மீது வழக்குகள் என்று எதை அவர்கள் எதிர்பார்த்தார்களோ அது நடந்து கொண்டிருக்கிறது.
இன்றைக்கு பிரச்னை நீதிமன்றத்துக்கு வந்து விட்டது. வைரமுத்துவின் கட்டுரையில் என்ன தவறு என்று ஆராயும். தீர்ப்புக்கு காத்திருப்போம்.
எப்போது பார்ப்பனர்கள் வீதிக்கு வந்திருக்கிறார்கள்? தமிழர்கள் பிரச்னை எதற்காவது வந்திருக்கிறார்களா?
கொடுமை என்ன? ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக எல்லாரையும் வேதம் சொன்னது என்று வர்ண பேதத்தை ஏற்படுத்தி பெரும்பாலானவர்களை அடிமைப் படுத்தி வந்த ஒரு கூட்டம் சாதி ரீதியாகவும் எல்லாரையும் பிரித்து வைத்து என்று சேர விடாமல் பார்த்துக் கொண்டு இன்னமும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டு அடித்துக் கொள்ள வைக்கிறானே என்று சிந்திக்க தமிழனுக்கு அறிவே இல்லையா?
ஆண்டாள் என் தாயைப் போன்றவர் . அவரை நான் தவறாக பேசுவேனா என்ற வைரமுத்துவின் சமீப கருத்து பிரச்னையை தீர்க்குமா?
இந்து என்பவன் யார் ? இந்து மதம் என்ற ஒன்றே இல்லாதபோது எப்படி இவர்கள் தங்களை இந்துக்கள் என்று சொல்லிக் கொள்ள முடியும்? எல்லாருக்கும் ஒரு அடையாளம் வேண்டி இருக்கிறது. அறுவித நம்பிக்கைகளை ஒன்றாக்கி இந்து என்றாக்கியிருக்கிறார்கள் .
நமக்கும் இதனால் பெரும்பான்மை என்ற பலம் கொடுப்பதால் ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.
கேள்வி கேட்க யாருக்கும் அதிகாரம் இல்லை. ஆனால் ஒரு சிறுபான்மை அதிகாரம் செலுத்தி கொண்டிருக்கிறது.
தமிழர்கள் புத்தியை பயன் படுத்தி தங்களுக்குள் வன்முறையில் ஈடுபடாமல் அறிவாயுதம் ஏந்தி பிரச்னையை தீர்த்துக் கொள்ள வேண்டும்.
ஏமாந்தது போதும். அரசியல் ஆதாயத்துக்காக காட்டிக் கொடுக்கும் கருங்காலிகள் உருவாகாமல் இருக்க அந்த இறைவனே நல்வழி காட்ட வேண்டும்.
ஆம். அந்த இறைவன் அருவ உருவமற்றவன். சாஸ்திர சம்பிரதாயங்களுக்குள் அடங்காதவன். எந்தப் பெயரும் அவனுக்கு இல்லை. இத்தகைய நம்பிக்கை கொண்ட நான்கூட இந்துதான். இல்லையென்று சொல்ல எவருக்கும் உரிமையில்லை .
அந்த உரிமையில் சொல்கிறேன். தமிழர்களே பார்ப்பனீய சூழ்ச்சிக்கு இரையாகாதீர்கள்!!!
This website uses cookies.