திருமாவளவனை கண்டால் அடிக்கச் சொன்ன காயத்ரி ரகுராமை காவல் துறை கைது செய்திருக்க வேண்டும்?
திருமாவளவன் ஒரு பாராளுமன்ற உறுப்பினர். அவரை கண்டால் அடியுங்கள் என்று ஒரு பெண் பதிவிடுகிறார். அவர் பாஜகவை சேர்ந்தவராக இருப்பதால் எதை வேண்டுமானாலும் பேசிவிடுவதா?
சட்ட ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய காவல் துறை அவர் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
திருமாவளவன் அசிங்க சிற்பம் இருந்தால் அது இந்து கோவில் என்று பேசியது உண்மையென்றால் அதுவும் தவறுதான்.
இந்துக் கோவில்களில் உள்ள சிற்பங்களில் கலை நயத்தை தான் பார்த்திருக்கிறோம். ஆபாசமாக யாரும் எடுத்துக்கொண்டதில்லை.
வேண்டுமென்றால் அவர்மீதும் நடவடிக்கை எடுக்கட்டும். அவர் தன்னிலை விளக்கம் கொடுத்து விட்டார். பேச்சு வேகத்தில் அப்படி பேசி விட்டேன் என்ற விளக்கம் ஒப்புக் கொள்ளப்படவில்லை என்றால் நீதிமன்றம் அதை முடிவு செய்யட்டும்.
அதற்காக காயத்ரி பேசியதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?
அதிமுக அரசு ஏற்றுக் கொள்கிறதா?
இருவர் பேச்சையும் ஒப்பீட்டளவில் ஒன்றுபடுத்த முடியாது.
தமிழக அரசியல் தரம் தாழ்ந்து போகிறது. அதற்கு அரசுதான் கடிவாளம் போடவேண்டும்.
பாஜகவில் அந்தப் பெண்மணி இருப்பதால் அதிமுக அரசு பாராமுகமாக இருப்பது நல்லதல்ல.