வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் சாஹித்ய அகாடமி பரிசு பெற்றது.
அந்த நூல் 23 இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டு வருகிறது என்பது வரவேற்கத் தக்க செய்தி.
கூடுதலாக சாஹித்ய அகாடெமிக்கு அதன் இந்தி மொழிபெயர்ப்பில் உருவான கள்ளிக்காட்டு இதிகாசம் நூலுக்காக இந்த ஆண்டின் சிறந்த இந்தி புத்தக விருது கிடைத்திருக்கிறது .
Nagaphani Van Ka Itihaas – என்பது இந்திப் புத்தகத்தின் பெயர்.
இந்த விருதை இந்திய வர்த்தக தொழில் கழகம் வழங்கி உள்ளது.
நமது சிந்தனை தமிழ் கூறும் நல்லுலகத்தின் உள்ளே மட்டும் நின்று விடாமல் பல மொழிகளுக்கும் பரவுவதுதான் சிறப்பு.
அந்த வகையில் தமிழ் சிந்தனையை பல மொழிகளுக்கும் கொண்டு சென்ற வைரமுத்து பெருமைக்குரியவர்.
வாழ்த்துக்கள்.