பொதுமேடையில் நாம் பரிந்துரைத்த படி கடைசியில் பி டி அரசகுமார் பாஜகவில் இருந்து விலகி திமுகவில் அதன் தலைவர் முக ஸ்டாலின் முன்னிலையில் தன்னை இணைத்துக் கொண்டார்.
பாஜகவில் இருந்து கொண்டே இவர் அன்று பேசியது கொஞ்சம் அதிகம்தான் என்றாலும் இதையே வேறு யாரும் பேசி இருந்தால் ஒன்றும் செய்திருக்க மாட்டார்கள்.
சுப்பிரமணியசாமி பேசி வருவதை விடவா யாரும் அதிகம் பேசி விட முடியும்? இதற்கு அவர்கள் என்ன பதில் வைத்திருக்கிறார்கள்?
இதை எல்லாம் பற்றி கவலைப் படுகிற மன நிலையில் பாஜகவினர் இல்லை. அவர்கள் நடிகை நமீதா பாஜக வில் சேர்ந்ததை நினைத்து மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
எப்படியோ அர்சகுமாருக்கு போதுமேடையின் வாழ்த்துக்கள்?!