மனுநீதியை ஏற்கிறதா எடப்பாடி அரசு?
எச் ராஜா எஸ்வி சேகர் இருவருக்கும் ஒரு நீதி
கருணாசுக்கு ஒரு நீதி-
எடப்பாடிஅரசின் நடவடிக்கைகள் இதைத்தான் காட்டுகின்றன
எஸ் வி சேகர் மீது வழக்கு பதியப்பட்டு பல நாட்களாக
கைது செய்யப்படாமல் வலம் வந்து கொண்டிருந்தார்
தலைமைச் செயலாளரின் உறவினர் என்பதால்
அரசு பேசாமல் இருக்கிறதா என்ற கேள்வி அதிகரித்தது
உச்சநீதிமன்றம் வரை சென்ற சேகரை கைது செய்ய
தடை விதிக்க மறுத்தது நீதிமன்றம்
வேறு வழி இல்லாமல் ஒரு நல்ல நாள் பார்த்து
காவல் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜராகி
உடனே பிணையில் விடுதலையானார் சேகர்
எச் ராஜா கதை வேறு அவர் மீது வழக்கு பதியப் பட்டிருக்கிறது
2 தனிப்படை அமைத்து தேடிக்கொண்டிருக்கிறது காவல்துறை
அதே காவல் துறை பாதுகாப்புடன் நான் சுதந்திரமாக இருக்கிறேன்
என அறிவித்து விட்டு வலம் வந்து கொண்டிருக்கிறார் எச் ராஜா
சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் மீது வழக்கு பதிவானது
உடன் காவல்துறை சுறுசுறுப்பாகி அதிகாலை நேரத்தில்
கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது
அவரது பேச்சு நியாயமானதா என்பது விவாதத்துக்கு உரியது
பேச்சின் சில பகுதிகள் ஏற்றுக்கொள்ளவே முடியாதவை
ஒரு சட்ட மன்ற உறுப்பினர் என்ற தகுதிக்கு தகாதவை
இப்போது பிரச்சனை அதுவல்ல
ஏன் இதே நடவடிக்கை எச் ராஜா மீது பாயவில்லை என்பதுதான் கேள்வி?
மனு நீதியில்தான் பிராமணன் கொலை செய்தால்
தலை முடியை சிரைத்து நாடுகடத்து
மற்றவன் செய்தால் தலையை வெட்டு என எழுதி வைத்தார்கள்
இந்த இரட்டை நீதி எடப்பாடி ஆட்சியில் தொடர்கிறதா?
கருணாசுக்கு பரிந்து எந்த முக்குலத்தோர் அமைப்பும் அறிக்கை விடவில்லை
ஆனால் தமிழ்நாடு பிராமணர் சங்க மாநில தலைவர் நாராயணன்
தலைமையில் நடந்த கூட்டத்தில் பேசிய அதன் தலைவர் பேசுகிறார்
” பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா மீது வழக்குகள் பதிவு செய்ததற்கு
சங்கம் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது . மேலும்
அந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என சங்கம் சார்பில்
வலியுறுத்தப் படுகிறது” என்று பேசியிருக்கிறார்.
வழக்கின் தன்மை பற்றி எதுவும் சொல்லாமல் எப்படி
வாபஸ் பெறுங்கள் என்று சொல்கிறார்?
இதுதான் சாதி வெறி.
சாதியத்தை தமிழக ஊக்குவிக்கிறதா?
இதற்கும் நீதிமன்றம் செல்ல வேண்டுமா? பொறுத்திருப்போம்?
This website uses cookies.