தமிழக அரசியல்

7 ஆயுள் கைதிகள் விடுவிப்பில் மத்திய அரசு காட்டும் வஞ்சனை! மாநில அரசு காட்டும் கையாலாகாத்தனம்??

Share

ராஜீவ் காந்தி கொலை வழக்கின் கைதிகள் ஏழு பேரை  27  ஆண்டுகள் சிறை வாசத்துக்குப் பிறகும் விடுவிப்பதில் மத்திய மாநில அரசுகள் காட்டும் ஓரவஞ்சனையும் பாரபட்சமும் கையாலாகத் தனமும் எவரையும் துயரத்தில் தள்ளும் .

மத்திய புலனாய்வு நிறுவங்களால் தாக்கல் செய்யப் பட்ட வழக்குகளில் சம்பந்தப் பட்ட குற்றவாளிகளை விடுவிக்கும் முன்பு மத்திய அரசிடம் தகவல் தர வேண்டும் என்பதுதான் சட்டமே தவிர ஒப்புதல் பெற அவசியமில்லை என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடாக இருந்தது.   இருக்கிறது.

ஆனால்  கு.ந ,சட்டம் பிரிவு  161  ன் படி முடிவு எடுப்பதற்கு அந்த அவசியம் கூட கிடையாது.

மாநில அரசே முடிவு எடுத்து அமுல் படுத்தலாம்.

இத்தனை ஆண்டு காலமாக விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இருந்தது எல்லாம் மத்திய அரசிடம் தகவலா ஒப்புதலா என்ற பிரச்னைதான்.

ஜெயலலிதா சட்ட மன்றத்திலேயே வீராவேசமாக ஒப்புதல் கிடைத்தாலும் கிடைக்கா விட்டாலும்  விடுதலை செய்வேன் என்று தேவை இல்லாமல் அறிவித்து மத்திய அரசு உச்ச நீதி மன்றம் சென்று தடை வாங்க உதவி செய்தார்.     அதாவது ஜெயலலிதாவுக்கு உண்மையில் அவர்களை விடுவிக்க மனம் இல்லை.

இருந்திருந்தால் பிரிவு 161ன் படி விடுதலை செய்து விட்டு வருவதை எதிர்கொள்ள தயாராகி இருப்பார்.

எல்லாம் நாடகம்.    இப்போதும் கூட மத்திய அரசிடம் மாநில அரசு விளக்கம் கேட்க  மத்திய அரசு தேவை இல்லாமல்  குடியரசுத் தலைவரிடம் கருத்து கேட்க அவர் மூலமாக மாநில அரசின் கோரிக்கையை நிராகரித்து தகவல் அளித்திருக்கிறதுமத்திய அரசு.

இதற்கு என் மகனை கருணை கொலை செய்து விடுங்கள் என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கோரிக்கை வைத்திருக்கிறார்.

நாட்டில் நீதி எல்லாருக்கும் சமமும் இல்லை.        வஞ்சகத்தில் யாரும் சளைத்தவர்களும் இல்லை.

அவர்கள் அப்படி இருப்பதில்  வியப்பில்லை.  நம்மிலே இத்தனை அடிமைகளா?

This website uses cookies.