தமிழக அரசியல்

டாடி மோடி எடப்பாடிக்கு கொடுத்த பரிசு என்ன தெரியுமா?!

Share

ராஜேந்திர பாலாஜி மோடி எங்கள் டாடி என்று பேசினாலும் பேசினார் டாடி  எடப்பாடிக்கு ஊக்கப் பரிசு அறிவித்து விட்டார்.

அதுதான் தமிழ்நாட்டுக்கு நிர்வாகத்தில் சிறந்த மாநிலம் என்ற மத்திய அரசின் தர வரிசைப் பட்டியலில் முதல் இடம்.

2021 தேர்தலில் எப்படியும் பாஜகவுடன் தான் அதிமுக கூட்டணி வைத்து போட்டியிடும்.

அதற்காக இப்போதே தரச் சான்றிதழ் கொடுத்த வைப்பது நல்லதல்லவா?

ஒன்பது துறைகளில் இரண்டில் மட்டுமே முதல் இடத்தை பிடித்த தமிழ்நாட்டுக்கு மொத்தமாக முதல் இடம் கொடுத்தது எப்படி?

2014ல் வாஜ்பாய் பிறந்த நாளன்று துவங்கிய இந்த நல்ல நிர்வாக நாள் என்ற திட்டம் முதல் முதலாக இந்த ஆண்டுதான் மாநிலங்களுக்கு தர வரிசையை கொடுத்திருக்கிறது. ஏன் இந்த ஆண்டு தொடங்க வேண்டும் என்ற கேள்விக்கும் இந்த தர வரிசையை தயாரிக்க என்ன முறை கடைப்பிடிக்கப் பட்டது என்ற கேள்வியிலும் விடைகள் நேரடியாக கிடைக்க வில்லை. 

பிரதமரின் அலுவலக மூலம் தான் இந்த திட்டம் வெளியே வந்திருக்கிறது. தனது அரசியல் காரணங்களுக்கு ஆக அரசு யந்திரத்தை மத்திய அரசு பயன் படுத்தி இருக்கிறது என்பதுதான் பொதுமக்களின் கருத்து.

ஊழல் குற்றசாட்டுகளில் சிக்கி இருக்கும் அமைச்சர்கள் எப்படி நல்ல நிர்வாகத்தை தர முடியும் ?

வாஜ்பாய் பிறந்த நாள் டிசம்பர்  25 வருகிற காரணத்தை காட்டி , அன்று கிறிஸ்துமஸ் விடுமுறை நாள் என்பதை பொருட் படுத்தாமல் அன்று வேலை நாள் என்று அறிவித்தது மோடியின் அலுவலகம். பிறகு எதிர்ப்பு கிளம்பியபிறகு அந்த திட்டத்தை ஒத்தி வைத்திருக்கிறார்கள். அவ்வளவு நல்லவர்கள்.

அந்த நல்லவர்கள் இந்த ஊழலில் வல்லவர்களுக்கு பரிசு கொடுத்திருக்கிறார்கள்.

என்னதான் முட்டுக் கொடுத்து பார்த்தாலும் பாஜகவை மக்கள் நம்ப மறுக்கிறார்களே?! ஏனென்றால் இது தமிழ்நாடு.

 

This website uses cookies.