பள்ளர், குடும்பர், காலாடி, கடையன், தேவேந்திர குலத்தான், பண்ணாடி ஆகிய ஆறு வகுப்புகளை தாழ்த்தப்பட்டோர் பிரிவிலிருந்து நீக்கி தனியாக தேவேந்திர குல வேளாளர் என்று அறிவிக்க வேண்டும் என்பது டாக்டர் கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் போன்றோரின் கோரிக்கை.
இதை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க கலைஞர் கருணாநிதி நீதியரசர் ஜனார்தனன் தலைமையில் ஒரு நபர் கமிட்டியை 02/02/2011ல் அமைத்தார். பதவி இழந்ததால் அதன் அறிக்கை தாக்கல் ஆனதா என்பதே தெரியவில்லை.
அதன் பின் எடப்பாடி அரசு ஹன்ஸ் ராஜ் வர்மா தலைமையில் நான்கு நபர் கமிட்டியை அமைத்தது. அதன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாகவும் ஆனால் அதன் முடிவுகளை அரசு ஏற்றுக் கொண்டதா இல்லையா என்பது தெரியவில்லை.
நாங்குநேரி இடைதேர்தலில் புதிய தமிழகம் கொடியை பயன்படத்தக் கூடாது என்று காவல் நிலையத்தில் புகார் அளிக்கும் வரை பிரச்னை போகிறது.
சென்னை பல்கலை கழகத்தின் டாக்டர் சுமதி என்பவர் ஓராண்டு காலம் ஆய்வுகளை நடத்தி இது தொடர்பாக ஒரு அறிக்கையை அளித்து உள்ளார். அதுவும் ஏற்றுக் கொள்ளப்பட்டதா இல்லையா என்பதும் தெரியவில்லை.
இதுபோல் சமுதாயங்கள் தொடர்பான பிரச்னை களை எப்படி தீர்ப்பது என்று உச்ச நீதிமன்றம் வழி காட்டியுள்ளது. குமாரி மாதுரி பாட்டில் என்பவர் வழக்கில் இது போன்ற பிரச்னைகளை சமுதாயங்களை பற்றிய நுண்ணிய அறிவும் ஆய்வும் செய்த நபர்களை கமிட்டி உறுப்பினர்களாக போட்டு முடிவெடுக்க வேண்டும் என்று தீர்ப்பு சொல்லி இருக்கிறது.
ஆனால் எடப்பாடி அரசு ஹன்ஸ் ராஜ் வர்மா தலைமையில் நான்கு நபர் கமிட்டி அப்படி தகுந்த வர்களாக இருக்கிறார்களா ?
இவர்கள் தனி வகுப்பானால் அவர்களுக்கான இட ஒதுக்கீடு என்ன என்பது கேள்வியாகும். இப்போது இருக்கும் இட ஒதுக்கீட்டில் மறு பரிசீலனை செய்ய வேண்டி வரும். என்ன செய்யப் போகிறது அரசு?
இது தொடர்பாக எடப்பாடி அரசுதான் விளக்க வேண்டும்.
This website uses cookies.