நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் தினகரனின் அமமுக 94 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளை கைப்பற்றி இருக்கிறது.
முடிந்து விட்டது என்று சொல்லப் பட்ட தினகரனின் அரசியல் துளிர்த்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
திமுக -அதிமுக இரண்டு கட்சிகளும் கூட்டணி சேர்ந்துதான் போட்டியிட்டன. அதில் திமுக பெருவாரியான இடங்களை பெற்று அதிமுகவை வென்று விட்டது. இந்த வெற்றியில் அமமுக வின் பங்கும் ஓரளவிற்கு இருக்கும் போல்தான் தெரிகிறது.
தினகரனுக்கு கூட்டணி பலம் இல்லை. எப்படி இதை சாதிக்க முடிந்தது?
பாமக தேமுதிக, பாஜக, போன்ற அதிமுக கூட்டணி கட்சிகளும் காங்கிரஸ், விசி, இடது சாரி கம்யுனிஸ்டுகள் மதிமுக போன்ற திமுக கூட்டணி கட்சிகளும் பெற்ற வெற்றியை தனித்து நின்று பெற்றதால் தினகரன் கூடுதல் மதிப்பெண் பெறுகிறார்.
அதாவது அதிமுகவை எதிர்காலத்தில் உடைக்கும் வல்லமையை இன்னமும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் தினகரன் என்றுதான் சொல்ல வேண்டும்.
வெற்றி தோல்வி என்பதை தவிர்த்து தமிழக அரசியலில் தான் தவிர்க்க முடியாத சக்தி என்பதை தினகரன் நிருபித்து விட்டார் .
அதாவது வெல்லவும் முடியும் எவரும் வெல்வதை தடுக்கவும் முடியும்.