கோபத்தில்தான் உண்மை வெளிவரும்.
வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அடிக்கடி சர்ச்சை பேச்சுக்களை அள்ளித் தெளிப்பவர்.
ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார் என்று பொய் சொன்னோம் என்றார்.
பணம் இல்லாமல் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்றார்.
இப்போது வேடசந்தூரில் நடந்த கூட்டத்தில் பேசும்போது ஜெயலலிதா கொள்ளையடித்து வைத்திருந்த பணத்தை தினகரன் சுருட்டிக் கொண்டு ஸ்டாலினை முதல் அமைச்சர் ஆக்கவும் தான் துணை முதல்வர் ஆகவும் திட்டம் இடுவதாக பேசியிருக்கிறார்.
இதன் மூலம் ஜெயலலிதா கொள்ளையடித்ததை ஒப்புக் கொண்ட அமைச்சர் என்ற புகழையும் பெறுகிறார்.
சீனிவாசன் இன்னும் கொஞ்சம் மனம் திறந்து பேசினால் இன்னும் என்னவெல்லாம் வெளிச்சத்துக்கு வருமோ?
This website uses cookies.