மக்களிடம் மதிப்பிழந்து நிற்கிறது இ பி எஸ் – ஓ பி எஸ் அரசு.
இவர்களால் எந்த தேர்தலிலும் வெற்றி பெற முடியாது.
திருப்பரங்குன்றம் இடைதேர்தலில் இவர்களின் பலம் வெளிறிவிடும்!
அதற்கு முன் உள்ளாட்சி தேர்தல் கட்டியம் கூறிவிடும்
உயர்நீதி மன்றம் கெடு விதித்து விட்டதே தேர்தல் நடத்த?
திமுக -காங்கிரஸ் கூட்டணி வலுவாக வளர்ந்து வருகிறது
பேர் சொல்லும் கட்சிகள் எல்லாம் ஸ்டாலின் தலைமையில்
இந்நிலையில் திமுக கூட்டணி யை விட்டு விட்டு வந்தால்
காங்கிரசுடன் கூட்டு சேர தயார் என்று தினகரன்
பெங்களூரில் ஊதிப் பார்த்திருக்கிறார்.
ராகுலை திருமாவளவன் சென்று பார்த்தது
அடுத்த பிரதமர் ராகுலா என்றதற்கு தேர்தல் வரட்டும்
என்று ஸ்டாலின் பதில் சொன்னது
என்று சிலபல கணக்குகளை வைத்து தினகரன்
சித்து விளையாடி பார்த்திருக்கிறார்.
காங்கிரசோ கம்யூனிஸ்டுகளோ யாரும் மயங்கப் போவதில்லை
இது சூழ்ச்சிகளின் காலம்.
யாரையாவது வீழ்த்த வேண்டும் என்றால்
அவர்களது எதிர்ப்பு வாக்குகளை பிரிப்பது
காலங்காலமாக பார்க்கும் நடைமுறை
சென்ற முறை திமுக ஆட்சிக்கு வர முடியாமல்
போனது திமுக அதிமுக இல்லாத அணி
என்ற பெயரில் உருவான மக்கள்நல கூட்டணி
அது பிரித்த அதிமுக எதிர்ப்பு வாக்குகள்
இம்முறையும் அதே சூழ்ச்சி வேறு உருவத்தில் வரலாம்
மீண்டும் ஒருமுறை பா ஜ க வந்தால் இனி
ஜனநாயகம் கடந்த காலம்தான் என்ற பயம்
எல்லாருக்கும் இருக்கும் வரையில்
தி மு க கூட்டணியை யாரும் உடைக்க முடியாது.