திமுக தனது கூட்டணி கட்சிகளான இந்திய கம்யுனிஸ்டு கட்சிக்கும் மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்டு கட்சிக்கும் கொங்கு நாடு முன்னேற்ற கட்சிக்கும் 25 கோடி ரூபாய் நிதி கொடுத்ததாக கணக்கு காட்டியிருக்கிறது.
இந்த தகவல் தேர்தல் கமிஷனுக்கும் வருமான வரித்துறைக்கும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இப்படி வங்கி மூலம் வெளிப்படையான பண பரிவர்த்தனை குறித்து விமர்சனம் செய்கிறார்கள்.
இதில் ஏதாவது முறைகேடு இருந்தால் சட்ட பூர்வமான அமைப்புகள் கேட்கவேண்டும்.
எதிர்க் கட்சிகள் இதை கேள்வி கேட்க உரிமை இருக்கிறதா?
ஒவ்வொரு அரசியல் கட்சியும் தனது வரவு செலவு தொடர்பாக மற்ற கட்சிகளுக்கு பதில் சொல்ல என்ன கடமை இருக்கிறது?
நிதி பெற்ற கட்சிகள் தாங்கள் பெற்ற நிதியை எப்படி செலவு செய்தார்கள் என்பதை அந்தந்த கட்சி நிர்வாகிகளும் வருமான வரித்துறையும் தெளிவுபடுத்திக் கொள்வார்கள்.
மற்ற கட்சிகள் குறை சொல்வதை விட்டு விட்டு அவர்களும் தாங்கள் செய்யும் நிதி பரிவர்த்தனைகளை வங்கி மூலம் வெளிப்படையாக செய்து தங்கள் நேர்மையை நிரூபிக்க வேண்டும்.