தமிழக அரசியல்

மருத்துவருக்கு என்ன ஆச்சு? கூட்டணி தர்மத்துக்காக விலை போனோம் என்கிறாரே?

Share

குடிஉரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தார் பாமகவின் ஓரே நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ்.

இதுவரை சிறுபான்மை முஸ்லிம் மக்களுக்கு ஆதரவாக பேசி வந்த மருத்துவர் ராமதாஸ் இந்த முடிவை எடுப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

ஏனென்றால் இந்த சட்ட திருத்தம் ஆறு மதங்களை சேர்ந்தவர்களுக்கு தரும் குடி உரிமையை முஸ்லிம்களுக்கு மட்டும் மறுக்கிறது.

வாக்களிக்காமல் வெளியேறி இருக்கலாம். ஆதரித்து வாக்குப் போட வேண்டிய அவசியம் இல்லை.

எல்லாவற்றையும் விட மருத்துவர் ராமதாஸ் சொன்ன விளக்கம் தான் அற்புதம்.

சட்டத்திருத்தத்தில் எங்களுக்கு உடன்பாடு அதனால் வாக்களித்தோம் என்றால் யாரும் கேட்கப் போவதில்லை.

ஆனால் சொன்னார் பாருங்கள் பதில்.!

“ கூட்டணி தர்மத்துக்காக ஆதரித்து வாக்களித்தோம்”

அதாவது உடன்பாடு இல்லாவிட்டாலும் ஆதரிப்பார்கள் இவர்கள்.

இனிமேல் ராமதாஸ் எதை சொன்னாலும் இது உங்கள் கருத்துத்தானா அல்லது கூட்டணி கருத்தா என்று தெளிவுபடுத்திக் கொள்வது நல்லது.

மகனுக்கு மந்திரி பதவி கேட்டு ஆதரித்தீர்களா என்பார்கள் என்பதற்காக அமைச்சர் பதவி கொடுத்தாலும் வேண்டாம் என்போம் என்கிறார்.

மொத்தத்தில் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் அரசியல் தரம் பாதாளம் நோக்கி போய்க்கொண்டிருக்கிறது.

ஆக, மருத்துவரின் விலை கூட்டணி தர்மம்!

This website uses cookies.