அ.தி.மு.க வுக்கு இரட்டைத் தலைமை; ஏற்குமா தேர்தல் ஆணையம்?? நிலைக்குமா ஏற்பாடு?

Share

எந்த அரசியல் கட்சியிலும் இல்லாத வகையில்  அதிமுகவில்  இரட்டை தலைமை.

தலைமை ஒருங்கிணைப்பாளர்  ஓ பி எஸ்.    இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி.     இருவரும் சேர்ந்தே எல்லா முடிவுகளையும் எடுக்க வேண்டும்.     ஏதேனும் ஒரு சந்தர்பத்தில் ஒருவரே முடிவு எடுத்து அறிவித்தால் அதில் மற்றவருக்கு உடன்பாடு இல்லை என்றால் முடிவு எப்படி செல்லும்?

அதாவது ஒருவரின் கையில் மட்டும் முழு அதிகாரமும் கொடுக்கப் பட யாருக்கும் விருப்பம் இல்லை.    அல்லது நம்பிக்கை இல்லை.   இதுதான் தொடக்க முரண்பாடு .   முதல் கோணல்.

பொது செயலாளர் பொறுப்பையே எடுத்து விட்டு அது நிரந்தரமாக ஜெயலலிதாவுக்கு என்று அறிவித்தவர்கள்  தலைவரும் பொது செயலாளரும் இல்லாத ஒரு அரசியல் கட்சியை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்கள்.

இணைப்பு என்பது எல்லா பிரச்சினை களுக்கும் முடிவு கட்டுவதாக இருந்தால் அதில் பயன் உண்டு.

இவர்கள் இருவரும் இணைந்ததன் பின்னணியில் பா ஜ க இருக்கிறது.      இவர்களை ஆட்டுவித்து  தமிழகத்தில் கால் ஊன்ற முயற்சிக்கிறது என்ற பின்னணியில் பார்த்தால் இந்த ஏற்பாட்டிற்கு       தேர்தல் ஆணையம் அங்கீகாரம் தந்து விடும் என்று இவர்கள்  எதிர் பார்க்கிறார்கள்.

ஐ டி , அமலாக்கத்துறை ,   சி பி ஐ  மூலம் தினகரனை அடக்கி விடலாம் என்று மத்திய பா ஜ க அரசு திட்டமிடலாம்..

ஆனாலும் தினகரன் கட்டமைத்துள்ள போட்டி அ தி  மு  க அமைப்பு செயல் படும் நிலையில் இந்த ஏற்பாடு என்ன பயனை அளிக்கப் போகிறது. ?         எது அசல் என்று மீண்டும் தீர்மானிக்கும் நிலைமைதான் தொடர்கிறது.

சட்ட மன்றத்தில் இந்த ஆட்சி கவிழ்ந்தால் நிலைமை  மாறும்.    அதற்காகத்தான் தினகரன் ஆதரவு உறுப்பினர்களை மிரட்டும் வேலையில் காவல் துறையை முடுக்கி விட்டிருக்கிறது எடப்பாடி அரசு.   தேர்தல் கமிஷன் என்ன செய்ய போகிறது என்பதை நாடு எதிர் நோக்கி இருக்கிறது.

இதுவரையிலுமே ஒன்றும் செய்ய வில்லை. இனி என்ன செய்ய போகிறார்கள் ?     தேர்தல் கமிஷனின் அணுகுமுறை கட்சிக்கு கட்சி வேறுபடுகிறது.    சமாஜ்வாதி கட்சியில் பிரச்னை ஏற்பட்டபோது அகிலேஷுக்கு ஆதரவாக முடிவு எடுக்க வில்லையா?

இரட்டை தலைமைக்கு இரட்டை சின்னம் கிடைக்குமா என்ற கேள்விக்கு எப்போது பதில் கிடைக்கும்?

ஜீரோக்கள் மட்டுமே தலைமை இடத்தில் இருந்தால்  அதற்கு என்ன மதிப்பு இருக்கும்?

ஏனென்றால் எவரையும் நம்பர் ஒன்றாக ஏற்க  யாருமே தயாராக இல்லையே?

 

 

This website uses cookies.