சட்டமன்றத்தில் காலில் விழுந்த அமைச்சர் துரைக்கண்ணு அங்கீகரித்த ஜெயலலிதா???!!! யாருக்கும் வெட்கமில்லையா???!!!

r-duraikannu

தமிழக சட்ட மன்றம் நடந்து வருகிறது.    மானியக் கோரிக்கைகள் மீது அமைச்சர்கள் பேசி வருகிறார்கள்.

முதல்வர் ஜெயலலிதாவை போற்றிப் புகழ்வது மட்டுமே பிரதான வேலையாக அமைச்சர்கள் செயல்படுவது வழக்க மாகிவிட்டது.

நேற்று முதல்வர் ஜெயலலிதா விதி 110 ன் கீழ் ஒரு அறிக்கையை படித்து விட்டு அமர்ந்த போது அமைச்சர்கள் காமராசும் செல்லூர்  ராசுவும் வாழ்த்தி  ஒலிகள எழுப்ப  அமைச்சர் துரைக்கன்னுவோ ஒரு படி மேலே போய் தங்கத்தாரகையே வருக வருகவே என்ற கட்சிப் பாடலைப் பாட உறுப்பினர்கள் மேஜையை தட்டி பின்னணி இசை எழுப்ப சட்ட மன்றமே ஜால்ரா

மன்றமானது. .

அப்போதுதான் அமைச்சர் துரைக்கண்ணு எழுந்து சென்ற ஜெயலலிதா அமர்ந்திருக்கும் இடம் சென்று அவரது காலில் விழுந்திருக்கிறார்.    அதை ஜெயலலிதாவும்  அங்கீகரித் திருக்கிறார். . இதை டைம்ஸ் ஆப் இந்தியா நாளேடு செய்தியாக வெளியிட்டிருக்கிறது.   (  Duraikkannu  then went to the chief minister’s seat in the assembly and fell at her feet which the CM acknowledged. )

சபாநாயகர் எதையும் கண்டு கொள்ள முடியாது.   எவரும் இதை பிரச்னை ஆக்கவும் இல்லை.

தனிப்பட்ட முறையில் ஜெயலலிதா வீட்டில் எவர் காலில் விழுந்தாலும் அது அவர்களது தனிப்பட்ட விருப்பம்.      ஜெயலலிதா  காலில் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் மனைவியோடு  விழுந்ததை பத்திரிகைகளில் வெளியிட்டது யார்?

அ தி மு க  ஒரு அடிமைகளின் கூடாரம் என்று ஜெயலலிதாவால் நீக்கப் பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா கூறுகிறார்.

ஆமாம் நாங்கள் அடிமைகள் தான்  என்று ஒரு அமைச்சர் பெருமையுடன் கூறுகிறார்.

சட்டமன்றத்தில் இந்த இழிவை தமிழர்கள் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டுமா??!!