பூசாரிகளும் பண்டாரங்களும் தமிழில் பூசை செய்து வந்த பல கோவில்கள் இன்று பார்ப்பனர்கள் வசம் சென்றதால் அவர்கள் சமஸ்க்ரிதத்தில் அர்ச்சனை செய்து வருகிறார்கள்.
கோவில்களில் தமிழ் ஒதுக்கப் பட்டதில் இந்த பார்ப்பனர்களுக்கு அதிகம் பங்கு உண்டு.
கிராமப் புறத்தில் இருக்கும் அய்யனார் , மாரியம்மன் , பிடாரி அம்மன் கோவில்களில் பூசாரிகள் , பண்டாரங்கள் தான் தமிழில் அர்ச்சனை செய்து வருகிறார்கள்.
பல இடங்களில் கிராமத்தில் செல்வாக்கு உள்ளவர்களை கைக்குள் போட்டுக் கொண்டு பார்ப்பனர்கள் உள்ளே புகுந்து அவர்களை விரட்டி விட்டு இவர்கள் சமச்க்ரிதத்தில் அர்ச்சனை செய்து வருகிறார்கள்.
தமிழன்தான் எதையும் கண்டு கொள்ள மாட்டானே ?
அந்த வகையில் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சூலக்கல் மாரியம்ம்மன் கோவில் இதுவரை பண்டாரங்கள் பூசாரிகளாக இருந்து பூசை செய்து வருகிறார்கள்.
ஜமின் நிர்வாகத்தில் இருந்து இப்போது அறநிலைய துறை வசம் சென்ற வுடன் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் சின்னம்மா மகன் மணிகண்ட ராஜு கோவில் பூசாரிகளை அதிகாரம் செய்ய முயற்சித்த போது அவர்கள் எதிர்த்த தால் அர்ச்சனை செய்ய பார்ப்பனர்களை நியமிக்க ஏற்பாடு செய்து விட்டதாக அவர்களிடமே சொல்லி இருக்கிறார்கள்.
இப்படி காட்டிக் கொடுக்கும் வேலையை தமிழர்களே செய்யும் போதுதான் கோவில்களில் தமிழ் தன் இடத்தை இழக்கிறது.
திராவிட இயக்கம் ஆட்சியில் இருக்கும்போது இப்படி நடக்கிறதே என்ற கேள்வி எழுகிறது. ஆனால் இவர்கள் திராவிட இயக்க ஆட்சியை நடத்திக் கொண்டு இருக்கிறார்களா? விலை போய் விட்டார்கள் என்ற குற்றச்சாட்டு உண்மையா?
அந்தக் கோவிலின் பக்தர்கள் துணிந்து இந்த அக்கிரம ஆதிக்கத்தை எதிர்த்து குரல் எழுப்ப வேண்டியது அவசியம்.
பல கோவில்களில் நடந்த இந்த அத்து மீறல் இனி தொடரக் கூடாது.
This website uses cookies.