அவசர அவசரமாக திருவாரூருக்கு மட்டும் இடைதேர்தல் என்று அறிவித்து பின்னர் அதை ரத்து செய்து யாருடைய உத்தரவையோ நிறைவேற்றும் அமைப்பாக தன்னை காட்டிக் கொண்டது தேர்தல் ஆணையம்.
இப்போது பாராளுமன்ற தேர்தல் வரப்போகிறது. 21 சட்ட மன்ற இடங்கள் காலியாக இருக்கின்றன. சேர்த்து அறிவிக்க வேண்டியதுதானே?
திமுக தலைவர் முன்கூட்டியே எச்சரிக்கையுடன் தேர்தலை சேர்த்து நடத்துங்கள் என்று கோரிக்கையை வைத்துவிட்டார்.
நடத்த மாட்டார்கள் என்ற கணிப்புதான் கோரிக்கைக்குக் காரணம்,
மத்திய அரசின் அரசியல் நோக்கங்களுக்கு இரையாகும் அமைப்பாக தேர்தல் ஆணையம் இருக்கக் கூடாது.
21 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தால் மத்தியில் யார் வந்தாலும் மாநிலத்தில் நடக்கும் ஆட்சி ஆட்டம் கண்டுவிடும் என்பதில் சந்தேகம் இல்லை.
என்ன செய்யப் போகிறது தேர்தல் ஆணையம்?
இதற்கும் நீதிமன்றம் போகவேண்டுமா?