எடப்பாடி பழனிசாமி தன் அமைச்சரவை சகாக்களுடன் மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் புனித நீராடினார்.
சிதம்பரம் தியாகப்பா தீட்சிதர் வேதமந்திரங்கள் சொல்ல அதை இவர் திருப்பி சொல்ல ஆற்றில் இறங்கி புனித நீராடினர். ஓ எஸ் மணியன் சம்பத் கொறடா ராஜேந்திரன் குடந்தை ராமநாதன் எல்லாரும் சேர்ந்து புனித நீராடினர்.
மகாமகத்தில் ஜெயலலிதாவும் சசிகலாவும் புனித நீராடிவிட்டு அ தன்பின் நடந்த அரசியல் அலங்கோலங்கள் நினைவுக்கு வருகிறது அல்லவா?
விசேஷமாக காஞ்சி ஜெயேந்திரர் விழா மலரை வெளியிட இவர்கள் பய பக்தியுடன் பெற்றுக் கொண்டனர்.
இந்த கூட்டத்தில் யாரும் விதி விலக்கல்ல. சபாநாயகர் தனபால் ,செங்கோட்டையன், வேலுமணி காமராஜ் சேவூர் ராமச்சந்திரன், எல்லாரும் புனித நீராடி இருக்கிறார்கள்.
நீங்கள் பாவத்தை தொலைப்பதில் முனைப்பாக இருப்பதில் வியப்பில்லை.
இறைவன் அருள் உங்களுக்கு சித்திக்க நாங்களும் பிரார்த்திக்கிறோம்.
ஒரே ஒரு வேண்டுகோள்.
உங்கள் கட்சி பேனர்கள் துண்டு அறிக்கைகள், விளம்பரங்கள் கட்சியின் கொள்கை விளக்க குறிப்புகள் இவற்றில்
பெரியாரின் படத்தை தயவு செய்து எடுத்து விடுங்கள்.