தேர்தல் கமிஷன் ஆளும் கட்சிக்கு ஆதரவாக சின்ன சின்ன விடயங்களுக்கு கூட பாரபட்சம் காட்டுகிறது.
எந்த கட்சிக்கு ஆதரவு என்பது மக்களின் மனநிலையை பொறுத்தது.
ஏற்கெனெவே தினகரன் நீதிமன்றத்துக்கு போய்தான் பரிசுபெட்டி சின்னம் வாங்கினார். ஐந்து சதம் வாக்கும் வாங்கினார். இப்போதும் நீதி மன்றம் சென்றால் ஏதாவது ஒரு சின்னம் கொடுக்கும். நீதிமன்றம் சென்றுதான் அதை வாங்க வேண்டுமா?
தேர்தல் கமிஷன் தானாக அதை கொடுக்கக் கூடாதா?
இப்படி எல்லாம் நடந்து கொண்டால் தமிழர்கள் ஜனநாயகத்துக்கு அருகதை அற்றவர்கள் என்ற பெயர் தான் கிடைக்கும்.
எடப்பாடி தனது அதிகாரத்தை இப்படி எல்லாம் பயன் படுத்தக் கூடாது. கேட்டால் எங்களுக்கும் அதற்கும் தொடர்பே கிடையாது என்பார்கள். வேண்டாம் இந்த விளையாட்டு!
தோற்க வேண்டிய கட்சிதான் தினகரன் கட்சி. அது தானாக நடக்கட்டும். அதை தேர்தல் கமிஷன்தான் முடக்கி விட்டது என்ற குற்றச்சாட்டு வேண்டாம்.
ஆளும் கட்சி தேர்தல் ஆணையத்தை ஆட்டுவிக்கிறது என்ற குற்றச்சாட்டு இதன் மூலம் உறுதியாகும் என்பது தான் உண்மை.
This website uses cookies.