முதல்வர் தன் பதவிக்கு உரிய கண்ணியத்தை காக்க வேண்டும் என்பதுதான் எல்லாருடைய எதிர்பார்ப்பும்.
ஆனால் அவர் வார்த்தைகளை ஆராயாமல் அள்ளி விடுகிறார்.
வேலூர் தேர்தல் முடிவுக்குப் பின் ‘மிட்டாய்’ கொடுத்து பொய் வாக்குறுதிகளை கொடுத்து பெற்ற வெற்றி என்று விமர்சித்ததில் ஆரம்பித்து இப்போது ஸ்டாலினை விளம்பரத்துக்காக பேசுகிறார் ‘சீன்’ போடுகிறார் என்று தொடர்ந்து கடைசியில் ப.சிதம்பரத்தை ‘பூமிக்கு பாரம்’ என்று பேசும் அளவுக்கு போனது தமிழக அரசியல் களத்தையே மாசு படுத்திவிட்டது.
இபிஎஸ் இதுபோல் பேசி பழக்கப்பட்டவறல்ல. இப்போது பேச ஆரம்பித்து விட்டார் என்றால் அவரது இயல்பு இதுதானோ என்று எண்ணத் தோன்றுகிறது.
முன்பே கம்பராமாயணத்தை எழுதிய சேக்கிழார் என்று பேசியதில் தனது கௌரவத்தை பாதி இழந்திருந்த நிலையில் இனியாவது பேசும்போது கவனமாக இருக்க வேண்டும் என்று முடிவெடுத்திருக்க வேண்டும்.
திண்டுக்கல் சீனிவாசன் ராஜேந்திர பாலாஜி வரிசையில் முதல்வர் சேருவது உண்மையில் வருத்தத்துக்கு உரியதுதான்.
இனிமேலாவது கொஞ்சம் நிதானித்து பேசுங்கள் மாண்புமிகு முதல்வர் அவர்களே?
This website uses cookies.