டி ஆரின் மகன் என்பதால் தமிழர்கள் சிம்பு மீது ஒருவித அன்பு வைத்திருப்பது உண்மைதான்.
அதற்காக தன்னை ஏதோ அரசியல் வித்தகன் என்று எண்ணிக்கொண்டு தமிழர் -கன்னடர் ஒற்றுமையே காவிரி பிரச்னைக்கு தீர்வு- போராட்டங்கள் தேவை இல்லை என்றெல்லாம் சிம்பு பேசி தமிழர்களை அவமானப் படுத்தி விட்டார்.
போராடுபவர்கள் எல்லாம் அறிவே இல்லாதவர்களா? ஒற்றுமைக்கு எதிரானவர்களா?
சட்டத்தையும் தீர்ப்பையும் அமுல் படுத்த சொல்லித்தானடா போராட்டம்.
பிரச்னைகளை பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்றால் நதி நீர் தாவா சட்டமே தேவை இல்லையே?
காவிரிக் குடும்பம் அமைப்பை ஏற்படுத்தி விவசாயிகள் பேசித்தான் பார்த்தார்கள். என்ன நடந்தது?
பிரச்சனை தமிழர்-கன்னடர் இடையே இல்லை. பிரச்னையை அரசியலாக்கி ஆதாயம் தேட முயற்சிக்கும் கன்னட அரசியல்வாதிகள் தான் பிரச்னை.
போராடி போராடித்தான் நடுவர் மன்றம் இடைக்கால தீர்ப்பு, இறுதி தீர்ப்பு , உச்சநீதி மன்ற தீர்ப்பு எல்லாம் வந்தது. அதை அமுல்படுத்தினால் பிரச்னை ஓயும்.
அமுல்படுத்த மறுப்பது கன்னட அரசு.
அவர்களிடம் போய் என்ன பேச சொல்லுகிறாய்? அதுவும் தேர்தல் நேரத்தில்?
சிம்பு உனக்கு நடிக்க வாய்ப்பு இல்லையென்றால் பு …. என்று ஏதாவது பாட்டு எழுதி பிழைத்துக் கொள். அல்லது உன் அப்பனிடம் கேட்டுக் கொண்டாவது அரசியல் பேசு. அல்லது இப்பொது நீ பேசியதே அவரிடம் கேட்டுக் கொண்டுதானா என்பதையாவது சொல்லி விடு.
மகன் தந்தைக்கு ஆற்றும் உதவியாக இருந்து விட்டுப் போகட்டும்.
எவன் எவனோ அரசியல் பேசுகிறான். உனக்கு அரசியல் பேச முழு உரிமை உண்டு.
கொஞ்சம் புத்திசாலித்தனமாக பேசியிருந்தால் கொண்டாடலாம்.
குறுக்கு சால் ஒட்டி , விளம்பரம் தேட முயற்சித்து , மண்டை காலி என்று காட்டிக் கொண்டால் உன்னை என்ன செய்வது?
உன் மீது கோபம் வரவில்லை. நம்ம பையன் இப்படி இருக்கிறானே என்ற பரிதாபம் தான் வருகிறது.
சிம்பு , உனக்கு அரசியல் வேண்டாம்??!!
This website uses cookies.