விவாதம் நடத்திய தொலைக்காட்சி மீது வழக்கு!? இது எடப்பாடி நீதி??!!

puthiyathalaimurai

கோவையில் புதிய தலைமுறை தொலைக்காட்சி, ‘தொடர் போராட்டங்கள் அடிப்படை உரிமைகளுக்காகவா அரசியல் காரணங்களுக் காகவா’  என்ற தலைப்பில் விவாத மேடை நிகழ்ச்சி நடத்தியது.

எல்லா கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

அதில் தனியரசு எம் எல் ஏ வும்  இயக்குனர் அமீரும் பேசும்போது பா ஜ க வினர் தகராறு செய்துள்ளனர்.

எல்லாம் வீடியோ எடுக்கப் பட்டுள்ளதால் யார் யார் என்னென்ன செய்தார்கள் என்பதை அதிலேயே பார்த்துக் கொள்ளலாம்.

இவ்வளவு வெளிப்படையாக நடந்த நிகழ்ச்சியில் ,

கலாட்டா செய்தவர்களை விட்டு விட்டு தொலைகாட்சி மீதும் இயக்குனர் அமீர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளது காவல்துறை.

சட்ட மன்றத்தில் முதல்வர் விசாரணை முடிவில் நடவடிக்கை என்று அறிவிக்கிறார்.

எல்லாரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே இப்படி படுகொலை செய்யப் படுகிறதே நீதி?

பா ஜ க வினர் தகராறு செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை கிடையாதா?

அமீர் பாரதிராஜா சீமானுடன் சென்று காவல் துறை தலைவரிடம் புகார் செய்திருக்கிறார்.

இவ்வளவு நடந்திருக்கிறதே ஏன் புதிய தலைமுறை நடந்ததை அப்படியே ஒளிப்பதிவு செய்யப் பட்டதை ஒளிபரப்பக் கூடாது?

எந்த சட்டம் அதை தவறு என்று சொல்லும்?

மக்களுக்கு உண்மை தெரிய வேண்டாமா?

யாருக்கு அஞ்சுகிறார்கள்?

ஊடகங்கள் தவறு செய்யலாமா ?