தமிழக அரசியல்

மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து ; சதி என திசை திருப்பும் பா ஜ க ?!!

Share

மீனாட்சி அம்மன் கோவிலின் வசந்தராயர் மண்டபத்தில் உள்ள  36  கடைகள் தீ விபத்தில் சேதம் அடைந்து விட்டன.

தீ தடுப்பு உபகரணங்கள் தயாராக இல்லை  என்பது வெளிச்சத்துக்கு வந்தது.    தீயணைப்பு இயந்திரங்கள் உள்ளே சென்று  வேலை செய்ய முடியவில்லை.       கோவில் பரிகாரத்துக்கு உள்ளே கடைகள் இருக்க கூடாது என்று  2006 ம் ஆண்டே தமிழக சுற்றுலா துறை பரிந்துரைத்து தகுந்த மாற்று இடமும் தேர்ந்து எடுக்கப்பட்டு முறையாக பணிகள் தொடங்கப் படாமல் தாமதம் ஆனதால் இந்த இழப்பு ஏற்பட்டு இருக்கிறது..

நிர்வாக அதிகாரியின் செயல் திறன் குறையா அல்லது கடைக்காரர்கள் திருஷ்டி பரிகாரத்துக்கு கொளுத்திய சூடத்தில் இருந்து  எழுந்த தீ தான் விபத்துக்கு காரணமா என்பது விசாரணையில் தான் தெரியும்.

விசாரணை தேவை என்பதிலும் தொடர் நடவடிக்கை தேவை என்பதிலும் யாருக்கும் எந்த  ஆட்சேபணையும் இருக்க முடியாது.

ஆனால் எதெற்கெடுத்தாலும் அரசு ஆலயத்தை விட்டு வெளியேற வேண்டும் என்ற கோரிக்கை வைப்பதை பா ஜ க வும் இந்து முன்னணி பார்ப்பனர்களும் வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.     ஆம்.   பாஜகவின்  எச்  ராஜாவும் இந்து முன்னணியின் ராம கோபாலனும் இந்த கோரிக்கையை எழுப்பி இருக்கிறார்கள்.

இப்போது இந்து ஆலயங்கள் இந்துக்கள் கையில்தானே இருக்கிறது.    வேறு எந்த இந்துக்கள் கையில் ஒப்படைக்க வேண்டும்?     திமுக ஆனாலும் அ தி மு க ஆனாலும் இந்துக்கள் தானே.    பார்ப்பனீய எதிர்ப்பு கொள்கை உடையவர்கள் இந்துக்கள் அல்ல என்று சொல்ல யாருக்கு உரிமை இருக்கிறது?

பார்ப்பநீய ஆதரவு ஆட்கள் மட்டுமே இந்துக்கள் என சான்றிதழ் தரும் உரிமை பா ஜ க வுக்கும் இல்லை. வேறு யாருக்கும் இல்லை.

உங்களை நன்றாக புரிந்தவர்கள் தான் தமிழ் இந்துக்கள்.

எனவே அரசை ஆலயத்தை விட்டு வெளியேறும் கோரிக்கையை இனி எவரும் எழுப்பக்  கூடாது.    அப்படி எழுப்புபவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்ற நிலைமையை ஆட்சியாளர்கள் உருவாக்க வேண்டும்.

அப்போது மட்டுமே இவர்கள் திருந்துவார்கள்.

This website uses cookies.