தொப்பி குக்கர், சாவி மூன்றும் கேட்டு கடைசியில் பரிசுப்பெட்டகம் சின்னத்தை தினகரனின் அமமக வுக்கு வழங்கி இருக்கிறது தேர்தல் கமிஷன்.
இருபது ரூபாய் டோக்கன் ஆர் கே நகரில் கொடுத்தது போல் இங்கு தினகரன் என்ன கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் இருக்கிறது.
ஜெயலலிதா கொடுத்த கர்ப்பிணித் தாய்மார்களுக்கு குழந்தைகளுக்கு தேவையான பதினாறு பொருட்களை இது காட்டுகிறது என்று தினகரன் சொல்லும்போது இப்போது நீங்கள் என்ன வைத்துக் கொடுக்கப் போகிறீர்கள் என்ற கேள்வி எழுகிறது அல்லவா?
இந்த சின்னத்துக்கு 500 வாக்குகள் தான் கிடைக்கும் என்று ஜெயக்குமார் சொல்கிறார்.
சுயேச்சைகள் ஆகத்தான் இவரது கட்சி வேட்பாளர்கள் கருதப்படுவார்கள் என்பதால் எல்லா சுயேச்சைகள் வாங்கும் வாக்குகளை எப்படி ஒரு கட்சியின் வாக்குகள் ஆக தேர்தல் கமிஷன் எடுத்துக் கொள்ளும் என்பதும் கேள்விக்குறி.
எப்படி இருந்தாலும் இனி தினகரன் அதிமுக கட்சிக்கு உரிமை கோர முடியாது.
தனிக்கட்சி என்பதால் மற்றவர்களிடம் இருந்து எவர் என்னென்ன வகையில் வேறுபட்டு நிற்கிறார் என்பதை இவர் விளக்கியாக வேண்டும்.
ஒரு ஆர் கே நகர் வெற்றியை வைத்து இதுவரை கட்சி நடத்த இவரால் முடிந்தது. ஆனால் இந்த தேர்தலில் தோற்றால் கட்சி நடத்தும் தகுதியை இழந்து விடுவார்.
எப்படியோ பரிசுப்பெட்டகம் தினகரனை கரை சேர்க்குமா அல்லது அரசியலில் இருந்து விலக்கி வைக்குமா என்பதை இந்த தேர்தல் முடிவுகள் வந்தபின் தான் தெரியும்.
This website uses cookies.