பிறந்தது காங்கிரஸ் பாரம்பரியம். அரசியல் செய்வது இன்னும் காங்கிரஸ் பெயரில். ஆனால் சோனியா ராகுல் இருவரும் ஒத்துப் போகாத நிலையில் தனி ஆவர்த்தனம் செய்து வந்த ஜி கே வாசன் வேறு வழியின்றி கடைசியில் பாஜகவில் ஐக்கியம் ஆவதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துவிட்டன.
மாநிலத் தலைவர் பதவிக்காக தன் கட்சியை பாஜகவில் இணைத்து தற்கொலை செய்து கொள்வார் என்று எதிர்பார்க்க முடியாது.
ஆனால் பதவி ஆசை அரசியல்வாதிகளை எப்படியும் ஆட்டுவிக்கும் என்பதால் வாசன் எந்த முடிவுக்கும் தயாராகத்தான் இருப்பார். இனியும் செலவு செய்து கொண்டிருக்க முடியாது அல்லவா?
சென்னையில் பிரதமர் மோடி வாசனை தன் வீட்டுக்கு அழைத்த போதே தெரிந்து விட்டது. ஆபரேஷன் ஆரம்பித்து விட்டது என்று.
இன்று டெல்லியில் வாசன் மோடியை சந்திக்க சென்றிக்கிறார். ஏதாவது ஒரு முடிவோடுதான் சென்றிருக்க வேண்டும். ஒன்றுமில்லாமல் செல்ல மாட்டார் அல்லவா?
அதிமுக கொடுக்கும் சலுகைகளை விட மத்தியில் உத்தரவாதமாக இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு பதவியில் இருக்கும் பாஜக நிச்சயம் அதிகமாக சலுகைகள் வழங்க வாய்ப்புகள் அதிகம்.
இதை வாசன் தவற விட மாட்டார்.
இன்னும் எத்தனை துரோகங்கள் நடந்தாலும் பாஜகவுக்கு தமிழ் மக்கள் ஆதரவு அவ்வளவு சுலபத்தில் கிடைக்காது.
ஏன் அதிமுகவிலும் கூட பிளவுகள் வெடிக்கலாம். எல்லாருமா அடிமைகள் ஆகிட ஒப்புக் கொள்வார்கள்?
இன்னும் ஆறு மாதங்களில் இன்னும் என்னவெல்லாம் செய்யக் காத்திருக்கிறதோ பாஜக?
This website uses cookies.