ஆளுனரை பற்றி விவாதிக்கக்கூட விதிகளில் இடமில்லை என சபாநாயகர் அனுமதி அளிக்க சட்டமன்றத்தில் மறுக்கிறார்.
வேறு எங்குதான் விவாதிப்பது. ?
அதுவும் ஆளுநர் மிரட்டுகிறார்; பிரிவு 124 இ த ச படி என்னை செயல் பட விடாமல் தடுத்தால் ஏழு ஆண்டுகள் சிறை என்று மிரட்டுகிறார்.
ஆய்வு செய்ய ஆளுநருக்கு உரிமை உண்டா இல்லையா என்றால் இதுவரை இல்லை என்பதுவே பதிலாக இருந்தது. வேறு யாரும் இப்படி ஆய்வு செய்ய சென்றதில்லை.
வேறு எந்த மாநிலத்திலும் இது போல் நடக்க வில்லை. ஏன் பா ஜ க ஆளும் மாநிலங்களில் கூட இப்படி நடக்க வில்லை. ஏன் இங்கு மட்டும் நடக்க வேண்டும்?
ஆளும் கட்சியில் போட்டி போட்டுக் கொண்டு இதில் ஒன்றும் தவறு இல்லை என்கிறார்கள். முதல் அமைச்சர், பான்டியாராஜன், வேலுமணி, செல்லூர் ராஜு , ஓ எஸ் மணியன், ஜெயக்குமார் என்று பட்டியல் நீள்கிறது.
இ த ச பிரிவு ஆளுநர் மீது தாக்குதல் நடத்துவதை பற்றி பேசுகிறது. யார் இங்கு ஆளுனரை தாக்க முயற்சித்தது.?
இவர்தான் ஆய்வை தொடர்வேன் என்று மிரட்டுகிறார். தி மு க வை பொறுத்த வரை நாங்கள் அவர் ஆய்வுக்கு சென்றால் நாங்கள் கண்டித்து ஆர்பாட்டம் செய்வோம் என்கிறார்கள்.
இது எங்கு போய் முடியும்?
ஏற்கெனெவே ஆர்ப்பாட்டம் நடத்திய 1111 திமுகவினர் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறது காவல் துறை.
வேறு எந்த மாநிலத்திலும் இதுபோல் நடக்கவில்லை. இங்கு மட்டும் ஏன் நடக்க வேண்டும்?
ஆளுனரைபோல் குடியரசுத் தலைவரும் நானும் மாநிலம் தோறும் ஆய்வு செய்யப் போகிறேன் என்றால் மோடி ஒத்துக் கொள்வாரா? அத்தகைய குடியரசுத் இப்போது இல்லை என்பது வேறு.
மொத்தத்தில் மோதல் போக்கை கடைபிடிக்க வேண்டிய முறையை ஆளுநர் தேர்ந்தெடுத்தது ஏன் ?
தன் மீதான குற்றச்சாட்டு பிரச்னையை திசை திருப்பவா? நாளை பா ஜ க கூட்டணி அமைக்க அடித்தளம் போடுகிறாரா? குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு முன்னோடியா?
எப்படி இருந்தாலும் ஆளுநர் போக்கு ஜனநாயகத்துக்கு நல்லதல்ல.