தமிழக அரசியல்

ஆளுநரின் சங் பரிவார் பாசம்; சட்ட பல்கலை கழக துணை வேந்தர் நியமனத்தில் அத்துமீறல் ?!!

Share

ஆளுநரின் அத்துமீறலை ஆளும் அடிமை அரசு கண்டு கொள்ளாமல் இருப்பதால் அவரது அத்துமீறல் தொடர்கிறது.

எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மாவட்டம் தோறும் ஆய்வு நடத்த சென்றார்.    மாநில அரசு கண்டு கொள்ள வில்லை.

வரப்போகும் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு இப்போதே ஆளுநர் ஒத்திகை பார்க்கிறாரா என்ற குற்றச்சாட்டு எழுந்த போதும் கூட மாநில அரசு மௌனியாக இருந்தது.

விளைவு.  இப்போது டாக்டர் அம்பேத்கர் சட்டப்  பல்கலைக்  கழக துணை வேந்தர் பதவிக்கு தேர்வுக்குழு பரிந்துரைத்த நபர்களை புறந்தள்ளி ஆந்திராவை சேர்ந்த தம்மா சூரிய நாராயண சாஸ்திரியை துணை வேந்தராக ஆளுநர்  பன்வாரிலால் புரோஹித்  நியமனம் செய்துள்ளார்.

இவர் முன்பு இதே பல்கலை கழகத்தில் பணி  புரிந்த போதே ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளானவர்.    இப்போது துணை வேந்தர்.      ஆக அதிகாரம் இருந்தால் இவர்கள் எப்படி எல்லாம் மற்றவர்களை உதாசீனப் படுத்தி விட்டு ஆதிக்கம் செலுத்துவார்கள் என்பதற்கு இதுவே சாட்சி.

தமிழகத்தில் தகுதி உள்ள பலர் மனுச் செய்திருக்கும் போது வெளி மாநிலத்தில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் என்ன?

இத்தகைய முறைகேடுகளும் ஒரு வகையில் ஊழல்தான்.

மத்திய அரசின் தமிழர் விரோத போக்கின் மற்றும் ஒரு சான்று  இது.

This website uses cookies.