பெரியார் தமிழுக்கு எதிரானவர் என்று மீண்டும் சர்ச்சையை கிளப்பும் எச்.ராஜா? சதியின்வெளிப்பாடு ?

h-raja-on-periyar
h-raja-on-periyar

பெரியார் சிலையை உடைப்பேன் என்று வீராவேசம் பேசிவிட்டு தமிழகம் கொந்தளித்த பிறகு அடங்கிப் போன எச் ராஜா மீண்டும் தனது சில்லறை  புத்தியை காட்டும் வகையில் பெரியார் தமிழை எதிர்த்தார் என்றும் அவர் தமிழுக்கு எதிரானவர் என்றும் புதிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறார்.

எல்லாரையும் மதத்தின் பேரால் நம்பிக்கையின் பேரால் அடக்கி ஆண்டு கொண்டு மற்றவர்களை அதே ஆயுதத்தை பயன் படுத்தி வீழ்த்தப் பார்ப்பது பார்ப்பனீயத்தின் சூழ்ச்சி.

வடகிழக்கு மாநிலங்களில் கோடரிக் காம்புகளை பயன்படுத்தி தான் மாநில உரிமை கோருவோரை வீழ்த்தினார்கள்.

 தமிழகம் மட்டும்தான் அவர்களுக்கு அடங்க மறுக்கிறது.    அதற்கு காரணம் பெரியார்.  பெரியார்தான் தமிழரின் தன்மானத்தின் வலுவான அடித்தளம்.     அந்த அடித்தளத்தை அசைக்கப் பார்க்கிறார்கள். 

அவர் அடிப்படையில் சாதி ஒழிப்பு கிளர்ச்சிக்காரர்.    அவரை சாதி வெறியர் என்று பட்டம் சூட்டுகிறார்கள்.

சாதிகள் தமிழர்களை பிரிக்கிறது.   சாதிக்கு மூலம் மதம். மதத்தின் கரு கடவுள்.   எனவே கடவுளை மறுத்தால் தான் சாதிகளை ஒழிக்க முடியும் என்ற காரணத்தினால் தான் அவர் கடவுளை எதிர்த்தார்.

எல்லா பார்ப்பனர்களும் ராஜாவுக்கு ஆதரவு என்றாலும் அதை வெளிப்படையாக காட்டிக் கொள்ள மாட்டார்கள்.

அதனால்தான் பிராமணர் சங்க தலைவர் ராஜாவை கண்டித்து அறிக்கை  விட்டார்.

பார்ப்பனர்களின் பூணூலை அறுக்கும் சம்பவங்கள் நடக்க ஆரம்பித்த வுடன் எங்களை மிரட்ட முடியாது என்று நாராயணன் பேசுகிறார்.   அப்போது கூட வருத்தம்  தெரிவித்து விட்டதால் பிரச்னையை அப்படியே விட்டு விடலாம் என்கிறார்.

அமித் ஷா ராஜா மீது நடவடிக்கை எடுக்க மாட்டோம் என்கிறார். அப்படியானால் ராஜா பேசியதை அங்கீகரிக்கிறார்கள் என்றுதானே பொருள்.     பிரதமர் மோடி சிலை  உடைப்பை கண்டித்து அறிக்கை விட்டதாக சொல்கிறார்கள்.  எது வேண்டுமானாலும் பேசுவார்கள்.   நடவடிக்கை எடுக்க மாட்டார்கள்.  ஆனால் ஒப்புக்கு மறுப்பார்கள்.

இவர்கள் நிறுத்தப் போவதில்லை.   பெரியாரியம் உயிர்ப்போடு இருக்கும் வரை யாராலும் தமிழர்களை அடிமைப் படுத்த முடியாது என்பதால் அவர்களது தாக்குதல் பல்வேறு வகைகளில் நிச்சயம் தொடரும்.

சரியான அடி கொடுத்தால் தவிர  இவர்கள் திருந்த மாட்டார்கள்.

வன்முறை மீது நமக்கு நம்பிக்கை இல்லை.  ஆனால் அவர்கள் வன்முறையை அதிகாரம் வரும்போது மட்டும் பயன் படுத்து வார்கள்.

எனவே எச்சரிக்கையாவே இருப்போம்.