தமிழ்நாடு பயங்கரவாதிகளின் கூடாரமாக ஆகிவிட்டது என்று பாஜகவின் பொன் ராதாகிருஷ்ணன் விமர்சனம் செய்திருந்தார்.
அது முழமையாக அதிமுக அரசை குற்றம் சாட்டுவதாக அமைந்திருந்தது. குற்ற தடுப்பில் அதிமுக அரசு தவறி விட்டாகத்தானே பொருள்?
பாவம் திடீர் என்று அமைச்சர் ஜெயக்குமாருக்கு கோபம வந்துவிட்டது. பொன்னார் அமைச்சராக இருந்தபோது தமிழ்நாட்டுக்கு என்ன செய்தார். டெல்லியில் இருந்து வருவார். பேட்டி கொடுப்பார். அவ்வளவுதானே, என்னென்ன தமிழ் நாட்டுக்கு செய்தார் என்று சொல்ல முடியுமா என்ற கேள்வியையும் எழுப்பி இருக்கிறார்.
பொன்னார் சொல்வதை எல்லாம் நாங்கள் பொருட்படுத்துவதில்லை என்றும் ஜெயக்குமார் சொன்னார்.
எடப்பாடியின் ஆலோசனை இல்லாமலா ஜெயக்குமார் பேசியிருப்பார்?
இதற்கு பொன்னார் என்ன எதிர்வினை ஆற்றப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
பொன்னாருக்கு தமிழக பாஜகவில் செல்வாக்கு இல்லை என்பது ஜெயக்குமாருக்கு தெரிந்திருக்குமோ?
This website uses cookies.