பொது இடத்தில் புகைப்பது குற்றம். ஆனாலும் சிகரட் விற்பனைக்கு தடை ஏதும் இல்லை. இதுவே முரண்.
உன் தனி இடத்தில் உன்னை கெடுத்துக் கொள் . அதற்கு உரிமை உண்டு. ஆனால் அதை பொது இடத்தில் செய்து மற்றவர்களை தூண்டாதே !
இதுவே செய்தி.
ரஜினிகாந்த் கூட இப்போது புகைக்கும் காட்சிகளில் தோன்றுவது இல்லை.
அருவாளை காட்டலாம். கத்தியை காட்டலாம். சிகரெட்டை மட்டும் காட்டக் கூடாதா?
விஜய் மீது வழக்கு தொடரப் போவதாக புகையிலை கட்டுப்பாடு இயக்கம் அறிவித்திருக்கிறது .
மருத்துவர் ராமதாசும் அன்புமணியும் இந்தக் காட்சியை உடனே நீக்க குரல் கொடுத்திருக்கிறார்கள்.
ரஜினி, கமல் போல விஜயும் அரசியல் கனவுகளை வளர்த்துக் கொண்டு இருக்கிறார் என்பது அவரது சமீப கால நடவடிக்கை கள் மூலம் தெரிய வரும்.
அவர் தன் இமேஜை நல்ல விதம் வளர்ப்பது நல்லது.
ரசிகர் மன்றங்கள் தடை செய்யப் பட வேண்டும் . அதனால்தான் நடிகர்களுக்கு அரசியல் ஆசை வருகிறது. எந்த நாட்டிலும் இல்லாத கொடுமை இது.
நடிப்பை ரசிக்கும் ரசிகனை ஒன்றிணைப்பது அரசியலுக்கு மூலதனம் என்றாகி விட்டது.
மெர்சல் மூலம் நல்ல பெயர் எடுத்திருக்கும் விஜய் பேரைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம்.