தமிழக அரசியல்

புதிய ஆளுநர் அமித் ஷா முடிவை மீறி செயல் படுவார் என எதிர்பார்ப்பது முட்டாள்தனம் இல்லையா?

Share

பன்வாரிலால் புரோஹித் புதிய ஆளுநர் சட்ட பூர்வமாக செயல்பட்டு  தமிழ் நாட்டில் நிலவும் அசிங்கங்களை களைய வேண்டும் என்று கேட்டுக் கொள்வதும் வேண்டுவதும் மரபாக இருப்பதால்  திமுக செயல் தலைவர் தளபதி   அன்புமணி ராமதாஸ் உள்பட எல்லாரும் வேண்டுகோள் வைத்து விட்டனர்.

வித்யா சாகர் என்ன செய்தாரோ அதையே பன்வாரிலால் புரோஹித் செய்யப் போகிறார்.

தொடக்க முதலே சசிகலா-தினகரன் எதிர்ப்பு நிலையை அமித்ஷா-மோடி கூட்டணி எடுத்து விட்டது.

ஓ பி எஸ் -இ பி எஸ் இருவரும் போதும் . அவர்களிடம் ஐம்பது சதம் பேரம் பேசி இடம் வாங்கி காலூன்றி விடலாம் என்ற திட்டத்தில் இதுவரை எந்த மாற்றமும்  இல்லை.    சென்னையின் அறிவுஜீவி  ஆலோசனை தான் அங்கே ஒப்புக்கொள்ளப் பட்டு இங்கே இந்த அடிமைகளால் அமுல் படுத்தப் பட்டு வருகிறது .

எதிர்பாராத விதமாக தினகரன் இருவருக்கும் போட்டியாக ஒரு சமபலத்துடன் கூடிய அமைப்பை உருவாக்கி விடுவார் என்பது அவர்கள் எதிர்பாராத ஒன்றாக இருக்கலாம்.      ஐ டி   சி பி ஐ  என்று மிரட்டி அடக்கி விடலாம் என்ற நம்பிக்கை  இன்னமும்  அவர்கள் நடவடிக்கை களில் நன்றாக  தெரிகிறது.

நீதிமன்றம் ஒன்றே நம்பிக்கை தரும் அமைப்பாக இருந்தது.     அது நாளை என்ன செய்யும் என்று தெரிய வில்லையே?

தகுதி நீக்கம் ரத்து செய்யப் பட வேண்டும்.   அது உச்ச நீதி மன்றம் வரை செல்லும்..   திமுக உறுப்பினர்களின் உரிமைக்குழு முடிவு வேறு இருக்கிறது.

பெரும்பான்மை இல்லாத எடப்பாடி அரசு வெட்கமே இல்லாமல் சட்ட ஓட்டைகளை சாக்கு சொல்லி பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பதில் அவர்களுக்கு எந்த தயக்கமும் இல்லை.

சிறுபான்மை எண்ணிக்கையில் இருந்து கொண்டு பெரும்பான்மை ஆதரவை பெற்று   ஆண்டவர்கள் உண்டு.       அதை சட்ட மன்றத்தில் நிருபித்து விட்டால் பிரச்னையே இல்லையே?    ஏன் தயங்குகிறீர்கள்?       சட்ட மன்றத்தில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்காமல் ஆட்சியில் ஒட்டிக் கொண்டிருந்த சிறுபான்மை  அரசு ஏதாவது உண்டா?

ஒரு கட்டத்தில் தி மு க – காங்கிரஸ்- முஸ்லிம் லீக் உறுப்பினர்கள்    98  பேரும் ராஜினாமா செய்தால்தான் சட்ட மன்ற மாண்பு காப்பாற்றப் படும் என்றால் அதையும் செய்ய அவர்கள் தயங்க  கூடாது. 

அப்போதும் கூட இந்த வெட்கம் கெட்ட அரசு பதவியில் எப்படியாவது ஓட்டிகொண்டிருக்க முயல்வார்கள்!

ஒன்று நீதிமன்றம் நியாயமான தீர்வை சொல்ல வேண்டும்.

அந்த நீதி மன்ற நீதி கிடைக்க காத்திருக்கும் காலம்தான் இந்த ஆட்சிக் கொள்ளையர்களுக்கு வேண்டும்.  அதை தவிர்ப்பது இயலாது.

அல்லது மக்கள் போராட்டம் நடத்தி  இனி பொது தேர்தல் நடத்தி தான் ஆள முடியும் என்ற நிலையை உருவாக்க வேண்டும்.

இரண்டில் எது நடந்தாலும் அது விரைவில் நடக்க வேண்டும்.

                                  

 

This website uses cookies.