ஒவ்வொரு சொட்டு வியர்வைக்கும் ஒரு பவுன் தங்கக் காசு பரிசளித்த தமிழ்நாட்டுக்கு ரஜினிகாந்த் கொடுத்தது என்ன என்ற கேள்விக்கு பலருக்கு பதில் தெரியால் இருந்தது.
ரஜினி மீது அவர் தனது முதலீடுகளை கர்நாடகத்தில் செய்கிறார் என்று புகார் இருந்தது.
அது எவ்வளவு தூரம் உண்மை என்பது ரஜினிக்குத்தான் தெரியும்.
ஆனால் இன்று கமல்ஹாசன் பேட்டியளிக்கும்போது ரஜினிக்கு ஆதரவளிக்கிறது போல் காட்டிக் கொண்டு ரஜினிக்கு எதிரான கருத்துக்களை பேசினார்.
ஒன்று ரஜினி எங்கிருந்து வந்தாலும் அவர் தமிழர் ஆகி விட்டார் என்பது. அதாவது ரஜினி பிறப்பால் தமிழர் இல்லை என்பதை கமல்ஹாசன் சுட்டிக் காட்டுகிறார்.
கிருஷ்ணகிரியில் பிறந்திருந்தால் அவர் தமிழர் தானே. பின் ஏன் அவரை எங்கிருந்து வந்திருந்தாலும் என்று கூற வேண்டும்?
அடுத்து ரஜினி தனது முதலீடுகளை தமிழ்நாட்டில் செய்ய வேண்டும் என்பது. அதாவது இதுவரை ரஜினி தனது முதலீடுகளை தமிழ்நாட்டில் செய்யவில்லை என்பதத்தான் கமல்ஹாசன் நாசுக்காக சுட்டிக்காட்டுகிறார்.
கூட இருந்து கொண்டே இப்படி ரஜினியை காட்டிக்கொடுக்கலாமா கமல்?!