கமல்ஹாசன் மிகச் சிறந்த நடிகர். பிராமணர். ஆனால் அதை வெளிக் காட்டிக் கொள்ளாதவர் . தன்னை ஒரு நாத்தியவாதியாக அடையாளப் படுத்திக் கொள்வதில் பெருமை கொள்பவர். கலையுலகில் தனி முத்திரை பதித்துக் கொண்டிருப்பவர்.
கௌதமி நல்ல நடிகை. சமீபத்தில் புற்று நோய் விழிப்புணர்வுப் பணிகளுக்காக பிரதமரையும் குடியரசுத் தலைவரையும் சந்தித்துப் பேசி வந்தவர்.
இருவரும் பதிமூன்று ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.
இப்போது இருவரும் மனம் விட்டுப் பேசி பிரிந்து விட்டதாக கௌதமி வெளியிட்ட செய்தி மூலம் கதறிய வந்திருகிறது.
இருவரது வாழ்க்கையும் சினிமா உலகில் வசதி படைத்த நட்ச்சத்திரங்கள் எப்படி தாங்கள் வாழ்வை சுலபமாக அமைத்துக் கொள்கிறார்கள் என்பதற்கு உதாரணம்.
கமல் வாணியை மணந்து விவாகரத்து செய்து , பின் சரிகாவுடன் வாழ்ந்து இரண்டு பெண்களை பெற்றவுடன் திருமணம் செய்து கொண்டு பின் விவாகரத்து செய்து பின் கௌதமியுடன் செர்நேது வாழ்ந்து வந்தவர்.
கௌதமி கணவரை விவாகரத்து செய்து பெண் குழந்தையை வளர்த்து பின் கமலுடன் வாழ்ந்து வந்தவர் மகளின் எதிர்காலத்துக்காக பிரிந்த தாக தெரிகிறது.
பிரபலமானவர்கள் , கோடிகளில் சொத்து வைத்துக் கொண்டு வாழ்பவர்கள் எப்படி எந்த பிரச்னைக்கும் இடம் கொடாமல் தாங்கள் மனதிற்கு பிடித்த வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்பதை மற்றவர்கள் பாடமாக கொள்ள வேண்டும்.
கமலின் இரண்டு பெண்களும் தங்கள் வாழ்க்கையை தாங்களே வாழ்ந்து கொள்ளும் அளவு சம்பாதிப்பவர்கள்.
மேல்தட்டு மக்கள் எப்படி வாழ்ந்தாலும் உலகம் ஏற்றுக் கொள்ளும்.
இருவரும் மக்களின் அன்பைப் பெற்றவர்கள். நல்லவர்கள் என்ற அடையாளத்துடன் வாழும் அவர்கள் வாழ்வில் நிம்மதி நிலவட்டும்.