வரும் 23ம் தேதி திமுக தலைமையில் ஆன எதிர்க்கட்சிகள் குடி உரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து சென்னையில் கண்டனப் பேரணி நடத்த தீர்மானித்தன.
ஏற்கெனெவே மாணவர்கள் இந்த சட்டத்துக்கு எதிராக எல்லா மாநிலங்களிலும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
வடகிழக்கு மாநிலங்கள் பற்றி எரிந்து கொண்டிருக்கின்றன.
அங்கே போக முடியாமல் உள் துறை அமைச்சர் நிகழ்ச்சிகளை ரத்து செய்கிறார். வெளிநாட்டு அமைச்சர்கள் பயணங்களை ரத்து செய்கின்றனர்.
மேற்கு வங்கத்தில் போராட்டம் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது.
இந்நிலையில் கமல்ஹாசன் கட்சி இதுவரை இரண்டு கழகங்களுக்கு மாற்றாக செயல்படுவோம் என்று சொல்லி வந்தது.
இன்று போராட்டம் நடத்திய மாணவர்களை சந்தித்த கமல்ஹாசன் இந்த சட்டம் மாணவர்களையும் அகதிகள் ஆக்குகிறது என்றார்.
திமுக நடத்த இருக்கிற எதிர்ப்பு பேரணியில் எதிர்க்கட்சி என்ற அளவில் கமல்ஹாசன் கட்சியும் கலந்து கொள்ளும் என்று.
இவர் வருவது எதிர்கட்சிகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் தருவதற்கு என்றால் வரவேற்க வேண்டியதே.
ஆனால் நான் திமுகவிற்கு எதிரானவன். ஆனால் நானும் எதிர்க்கட்சி என்ற அளவில் மட்டுமே அது நடத்துகிற போராட்டத்தில் பங்கேற்பேன் என்றால் அதில் கொஞ்சம் சந்தேகம் வருகிறது. எல்லாரும் திமுகவுடன் கூட்டணியில் உள்ள கட்சிகள்.
நாளை கூட்டணியில் நானும் சேர்வேன் என்றால் இப்போது பங்கேற்பதில் தவறில்லை.
இவரை பார்ப்பதற்கு ரசிகர்கள் கூடி திமுகவில் எம்ஜியாருக்கு இருந்த செல்வாக்கைப் போல் எனக்கும் இருக்கிறது என்பதை காட்டுவதற்கு கலந்து கொள்கிறாரா என்பதும் தெரியவில்லை.
ரஜினியை நம்பிப் பயனில்லை என்ற முடிவுக்கு கமல்ஹாசன் வந்திருக்கக் கூடும்.
எப்படியோ நடப்பது நல்லதாக இருக்கட்டும்.