தமிழக அரசியல்

கே பி ராமலிங்கம் திமுகவில் இருந்து நீக்கம்?!

Share

2021  தேர்தல் நெருங்க நெருங்க இதுபோல் செய்திகள் இனி  அதிகம் வரும்.  ஏன் என்றால் கட்சி மாற நினைக்கும் பிரமுகர்கள் தலைமையை விமர்சிக்கும் விதமாக செயல்பாடு தங்கள் மீது  நடவடிக்கை எடுக்க வைப்பார்கள்.

அதைத்தான் கே பி ராமலிங்கம் செய்தார். திமுக தலைவர் ஸ்டாலின் கொரானா பாதிப்புகள் பற்றி விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட கோரிக்கை வைத்தார். அதில் மற்ற கட்சிக்காரர்களுக்கு கருத்து   வேறுபாடு இருக்கலாம். ஆனால் திமுகவின் விவசாய  அணி செயலாளருக்கு கருத்து வேறுபாடு  இருக்கக் கூடாது. இருந்தாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளக் கூடாது . மாறுபட்ட கருத்துக்களை  தலைவரிடமே  தெரிவிக்கலாம்.  ஆனால் பத்திரிக்கைகளில் தெரிவித்தால்  அது கட்சித் தலைமையை விமர்சிப்பதுபோல் ஆகும் என்பது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் நீண்ட நாள் அரசியல் அனுபவம் உடையவருமான ராமலிங்கத்துக்கு  தெரியாமல் இருக்க முடியாது.

ஆக தன் மீது நடவடிக்கை  எடுத்தால் எடுக்கட்டும் என்று  தெரிந்தே தான் எதிர்க்கட்சிகள் கூட்டத்தை கூட்ட தேவை இல்லை என்ற கட்சித் தலைவரின் கருத்துக்கு எதிரான கருத்தை கூறியிருக்கிறார்.

அவர் எதிர்பார்த்தது போலவே கட்சி  பொறுப்பு எடுக்கப் பட்டு  விட்டது.

அவகாசம் கொடுத்தும் வருத்தம் தெரிவிக்காததால் கட்சியில் இருந்தும் நீக்கப் பட்டு விட்டார்.

ஏற்கெனெவே எடுக்கப்பட்ட முடிவை எப்போது அரங்கேற்றப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இவை எல்லாம் பாஜக முக அழகிரி மூலம் நடத்தும் நாடகம் என்று ஒரு வதந்தி உலாவி வருகிறது..

கத்திரி முற்றினால் கடைக்கு வந்துதானே ஆக வேண்டும்.

This website uses cookies.