11600 விடுதலைப் புலிகள் போரின் முடிவில் சரண் அடைத்தார்கள். அவர்களை மறுவாழ்வு முகாம்களில் அடைத்து வைத்திருக்கிறது சிங்கள அரசு.
அவர்களில் 104 பேர் தொடர்ச்சியாக புற்று நோய் தாக்கி உயிர் இழந்திருக்கிறார்கள்.
போலோனியம் என்ற மருந்தை செலுத்தி புற்று நோயை வரவழைத்து சாகடிக்க திட்டமிட்டு செயல்படுகிறது இனவாத சிங்கள அரசு.
மிச்சமிருக்கும் புலிகளையும் மெல்ல மெல்ல கொன்று விடுவார்கள் என்ற அச்சம் வந்து விட்டது. வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் ஆதாரம் இல்லாமல் குற்றம் சாட்ட மாட்டார்.
போர் முடிந்து ஏழு ஆண்டுகள் ஆகியும் இன்னமும் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு குறித்து
எந்த விதமான பேச்சு வார்த்தையும் ஆரம்பம் ஆக வில்லை. இன்னமும் மறுவாழ்வு சீரமைப்பு என்று சொல்லிக் கொண்டே ராணுவத்தை விலக்காமல் கொடுங்கோல் ஆட்சி செய்து வருகிறது சிங்கள பேரினவாதம்.
இந்திய மீனவர்களின் உரிமைகளை பாதுகாக்காத இந்திய அரசு இலங்கை தமிழர்களின் உரிமைகளை எவ்வாறு மீட்டெடுக்கும் ?.
எதுவானாலும் ஒன்று பட்ட குரல் தமிழகத்தில் இருந்து எழ வேண்டும். அது மட்டுமே இலங்கைத் தமிழர்களின் பிரச்னைகளை தீர்க்கும்..
மத்திய அரசை தமிழர் நலன் காக்க நடவடிக்கை எடுக்க வைப்பதில் எப்போது தமிழர் இயக்கங்கள் வெற்றி பெருகின்றனவோ அன்றுதான் இறுதி வெற்றி கிடைக்கும்..
மோடி வந்தால் தீர்வு கிடைக்கும் என்று நம்பினோம். அறிகுறி தெரியவில்லையே ?