மக்கள் நீதி மய்யம்-கமல்ஹாசனின் அரசியல் படம் முதல் நாளே தோல்வி ??!!

kamal_haasan_polparty_eps
kamal_haasan

கமலின் படம் குறைந்த பட்ச வசூலை படம் வெளியான முதல் வாரத்தில் எடுத்து விடும் என்பது உண்மைதான்.

ஆனால்  நேற்றைய தினம் வெளியான  அவரது அரசியல் படம் அரைகுறை ஆடையோடு வெளியானதில் வரவேற்பு எப்படி இருக்கும் என்பது பற்றி  இன்னும் தெளிவான கருத்து இல்லை.

கொடியில் ஆறு மாநிலங்களை குறிக்கும் ஆறு கரங்கள் என்றால் வட மாநிலங்களை பற்றி கவலைப்படாமல் என்ன இந்திய தேசியம் ?     மீண்டும் திராவிட நாடு கோரிக்கையை முன்வைக்கிறாரா கமல்?

கொள்கை என்ன என்றால் எல்லாருக்கும் என்ன கொள்கையோ அதுதான் என் கொள்கை என்கிறார்.   பின் ஏன் தனி கட்சி?

அறிவிக்கப் பட்டிருக்கும் உயர் மட்ட குழு உறுப்பினர்களில் தெளிந்த அரசியல்வாதிகள் யாரும் இல்லை. நடிகை ஸ்ரீ பிரியாவும்  நாசர் மனைவி கமீலாவும் எப்போது அரசியல் பேசினார்கள்.>?

எல்லாம் நிர்வாக மயமாக்கப் பட்ட ஏற்பாடுகள்.      கட்சி நிர்வாகிகளுக்கே தெரியாமல் நிகழ்ச்சிகள் ஏற்பாடுகள்?

நீதிக் கட்சி யின் சாயல் வேண்டும்.    எதையும் விளக்கமாக சொல்ல தயாராக இல்லை.   தேவையும் இல்லை என்று தெளிவாகவே சொல்கிறார்.  திராவிட இயக்க அரசியலை முன்னெடுப்பதை போன்ற தோற்றத்தை காட்டி யாரை வசப்படுத்த முனைகிறார்.

அடுத்த நிலையில் உள்ள நிர்வாகிகள் யார் என்பதும் அடையாளம் காட்டப் பட வில்லை.

அரவிந்த் கேஜ்ரிவால் கட்சியே இங்கு எடுபட வில்லை.    அவர் முன்னிலை வகித்ததால் மட்டும் என்ன விளைவு ஏற்பட்டு விடும். ?

ஊழலை இனி வேடிக்கை பார்க்க மாட்டாராம்.     என்ன செய்து தடுப்பீர்கள்?

எல்லாருக்கும் தரமான உயர் கல்வியை தருவாராம்.      எல்லா தனியார் பள்ளிகளும் தனித்தனி பாடத் திட்டங்களோடு இயங்குகின்றன.     எல்லாவற்றையும் அரசு மயமாக்கி விட  முடியுமா?

காவிரி பிரச்னையை முறையான உரையாடல் நடந்தால் தீர்வு காண முடியும் என்கிறார்.      காவிரி தாவா சட்டமும் நீதிமன்றங்களும் தீர்ப்புகளும் தேவையே இல்லையே?

தீர்ப்பையே மதிக்காமல் அமுல் படுத்தும் ஆணையத்தை அமைக்க விட மாட்டோம் என்கிறார்கள்.     என்ன முறையான  உரையாடல் நடத்தி தீர்வு காணப் போகிறார்?

சாதி மத விளையாட்டுகள் போதும் என்று சொல்லி தான் ஏதோ சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டவர் என்று நிலை நாட்ட விரும்புகிறார்.

இதுவரை அடிமைப்படுத்தி வந்த எல்லா பார்ப்பனர்களும் இதையேதான் சொல்லி வந்தார்கள்.

சாதி மத அடிப்படையில் எப்படியெல்லாம் மக்களை அடிமைபடுத்தி வருகிறார்கள் என்பதை அடிமைப்பட்டவர்களே உணராத வண்ணம் அடிமைப்படுத்தி வருகிறார்களே இது என்ன மாயம்?

இன்னும் என்ன வேடங்களில் எல்லாம் வருவீர்கள் என்பதை அனுமானிக்க முடியவில்லையே.

திமுகவையும் ஸ்டாலினையும் அடுத்து ஆட்சியை பிடிப்பதில் இருந்து தடுக்க எடுக்கப் படும் பன்முக முயற்சிகளில் ஒன்றுதான் இதுவும் என்பதே பெரும்பாலான கருத்து.