சட்ட மன்றத்தில் குற்றவாளி ஜெயலலிதாவின் படத்தை திறப்பதை தடுக்க முடியாத தற்கு அது சபாநாயகரின் தனியுரிமை என்றும் அதில் தலையிட முடியாதென்றும் உயர் நீதி மன்றம் சொன்னது.
இப்போது அரசு செலவில் கடற்கரையில் ரூபாய் 50.8 கோடி மதிப்பீட்டில் அவருக்கு மனிபண்டபம் கட்ட முதல் அமைச்சர் எடப்பாடியும் துணை முதல்வர் ஓ பி எஸ் ம் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டியிருக்கிறார்கள்.
திராவிட இயக்கத்தின் தலைவிக்கு பிராமணர்கள் பூமி பூஜை செய்ய பய பக்தியுடன் முதல்வரும் துணை முதல்வரும் மாலையை போட்டுக் கொண்டு சடங்குகள் செய்ய , அதைக் காண கண் கோடி வேண்டும்??!!
சுயமரியாதை இயக்கம் தலை கவிழ்ந்து நின்றது.
அதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப் பட்டு விட்டதாகவும் தகவல்கள் சொல்கின்றன.
பீனிக்ஸ் பறவை வடிவத்தில் மண்டபம் அமையுமாம்.
இப்போது உயர் நீதி மன்றம் என்ன சொல்லும்?
சசிகலா சிறையில் இருந்து கொண்டே மகிழ்வார்.
குற்றவாளிகள் அரசியல் கட்சிகளுக்கு தலைமை வகிப்பதை தடை செய்ய சட்டம் ஒன்றும் இல்லை என்று சமீபத்தில் ஒரு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதே போல் குற்றவாளிகளுக்கு அரசு செலவில் நினைவு மண்டபம் அமைப்பதையும் தடை செய்ய சட்டம் ஒன்றும் இல்லை என்று தீர்ப்பு வருமோ?