ரஜினி காந்த் வெளிப்படையாக தனது எண்ணங்களை வெளிப்படுத்தி விட்டார்.
மக்களிடம் எழுச்சி வரட்டும். அது எனக்கு தெரியட்டும். அப்போ வர்றேன் . என்பதுதான் இறுதி செய்தி.
முதல்வர் கனவு தனக்கு என்றுமே இருந்ததில்லை என்றும் சொல்லி விட்டார்.
இளைஞர்களையும் அறிவில் சிறந்த ஓய்வு பெற்ற அதிகாரிகளையும் பதவியில் அமர வைப்பாராம். உழைப்பதற்கு மட்டுமே ரசிகர் மன்றத்தினர்.
சிலர் மட்டும் சந்தேகம் கிளப்பினார்கள். எல்லாம் ஸ்கிரிப்ட் படி தான் நடக்கும் என்றார்கள்.
அதாவது தனக்கு கிடைத்த தகவல்கள் படி மக்கள் எழுச்சி இருக்கிறது என்று சொல்லி அரசியல் கட்சி ஆரம்பித்து ஒரு 10 – 15 % வாக்குகளை வாங்கி திமுகவின் வெற்றியை தடுத்து விடுவதுதான் அது.
நான் இருக்கும்வரை முகஸ்டாலின் முதல்வராக முடியாது என்று சவால் விட்டிருக்கிறாரே பாஜகவின் முரளிதர்ராவ் . பாவம் அது அவருக்கு கொடுக்கப்பட்ட அசைன்மெண்ட் .
மேற்கண்ட கருத்தைத்தான் எதிரொலித்திருக்கிறார் தமிழருவி மணியன்.
வைகோ , , விஜயகாந்த் என்று இருவரையும் முதல்வர் கனவில் மிதக்க விட்ட மாமனிதர் மணியன். இப்போது ரஜினியின் அல்லக்கையாக மாறிவிட்டார். ரஜினி வேண்டாம் என்றாலும் விடமாட்டார் போல.
விரைவில் ரஜினிகாந்த் சுற்றுப் பயணம் செய்து கட்சி ஆரம்பிப்பார் என்கிறார் மணியன்.
அந்த முதல்வர் தானாக ஏன் இருக்கக் கூடாது என்ற எண்ணம் வந்து விட்டதோ என்னவோ. ?
கடந்த ஐம்பது ஆண்டுகளாக திராவிட கடசிகள் தமிழ்நாட்டை சுரண்டி விட்டன என்ற ரஜினியின் கருத்து சமூகநீதிக்கு எதிரானவர்களின் நஞ்சு தோய்ந்த கருத்து. சங்கிகளின் கருத்து.
குருமூர்த்திகளும் மணியன் களும் எப்படியாவது ரஜினியை பயன்படுத்தி தங்கள் இலக்குகளை நிறைவேற்றிக் கொள்ள துடிக்கிறார்கள்.
மாட்ட மாட்டேன் என்று அறிவித்து விட்டு பல்டி அடித்து திரும்பினால் மக்கள் ஏற்க மாட்டார்கள் என்பது ரஜினிக்கு தெரியாதா என்ன ?
ஓயட்டும் அல்லக்கைகள் ?!
This website uses cookies.