கி .வீரமணி பேரன் திருமணம் ஆடம்பரம், அழைப்பிதழ் இல்லாமல் தாலி கட்டி நடந்தது!! வாழ்த்துக்கள்?

ஐயா ஆசிரியர் கி வீரமணி அவர்கள் தன் பேரன் கபிலன்- மகாலட்சுமி திருமணத்தை பெரியார் திடலில் நடத்தி வைத்தார்.

அழைப்பிதழ் இல்லை.   ஆடம்பரங்கள் இல்லை.  வாய் மொழியாகவே கூறி விருந்தினர்களை வரவழைத்து சிக்கனமாக நடத்தி வைத்திருக்கிறார்.

எதை சொல்கிறோமோ அதை நடைமுறையில் செய்து காட்டும் நோக்கத்தில் இந்த திருமணம் நடந்ததாக அவரே செய்தியில் குறிப்பிட்டுள்ளார் .

மணமக்களை உறுதிமொழி ஏற்கக் செய்து நடந்ததா என்பது தெரியவில்லை.

ஆனால் வலைத் தளங்களில் ஆசிரியர் வீரமணி தன் கையால் மங்கல நாணை எடுத்து மணமகன் கையில் கொடுத்து மணமகள் கழுத்தில் கட்ட வைக்கிறார் என்பதை போல் காட்டியிருந்தார்கள்.

சீர்திருத்த முறை திருமணத்தை வலியுறுத்தும் கலைஞர் தாலி கட்டுவதை மட்டும் எதிர்த்ததில்லை.

அது சம்பிரதாயமான ஒன்றாக பின்பற்றப் படுவதால் இங்கு சுயமரியாதைக்கு எந்த வகையிலும் பங்கம் விளைவிக்க வில்லை என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

தாலி கட்ட வைத்தார் என்பதற்காக  வீரமணி அவர்களை குற்றம் சொல்லுவதை  சரியென்று ஏற்றுக் கொள்ள முடியாது.   மணமக்கள் வீட்டாரும் ஒப்புக் கொள்ள வேண்டிய ஒன்றல்லவா அது.

வாழ்க மணமக்கள்.