விஜயின் மெர்சல் படம் இலவச கல்வி இலவச மருத்துவம் எல்லாருக்கும் கிடைக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி எடுக்கப் பட்டது.
இடையில் பா ஜ க கொண்டு வந்த டிஜிட்டல் பரிவர்த்தனை ஜி எஸ் டி போன்ற பிரச்னைகளை நையாண்டி செய்துள்ளது.
கேள்வி. இப்படி விமர்சிக்க ஒரு நடிகருக்கோ தயாரிப்பாளருக்கோ உரிமை இருக்கிறதா இல்லையா என்பதுதான்.
அந்த விமர்சனம் தவறா சரியா என்பது வேறு. எல்லா பத்திரிகைகளிலும் செல்லாத நோட்டு பிரச்னையையும் ஜி எஸ் டி பிரச்னையையும் கழுவி கழுவி விமர்சனங்கள் வந்து விட்டன.
இரண்டுமே படு தோல்வி என்று எதிர்க்கட்சிகள் முடிவு எடுத்து நவம்பர் எட்டாம் தேதி அன்று அகில இந்திய அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்திருக்கிறார்கள் .
தமிழிசை சௌந்தர் ராஜன் தேவை இல்லாமல் விஜயை விமர்சித்து பிரச்னையை உருவாக்கினார்.
கருத்து உரிமையை நசுக்கும் அதிகாரத்தை பா ஜ க எப்போது தன் கையில் எடுத்துக் கொண்டது.?
கொஞ்ச நஞ்சம் மிச்சமிருந்த மரியாதையும் தமிழிசை இழந்திருக்க வேண்டியதில்லை.
படம் நூறு கோடியை தாண்டி வசூலித்துக் கொண்டிருக்கிறது. பா ஜ க வுக்கு நன்றி.